Dating App : டேட்டிங் ஆப் உங்க போனில் இருக்கா? திருட்டுத்தனமாக விற்கப்படும் உங்கள் தகவல்கள்? - மக்களே உஷார்!

Dating Apps : இளசுகள் முதல் பெரியவர்கள் வரை இப்பொது பல டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவ்வகை செயலிகளால், நமது தகவல்கள் பல திருடப்படும் அபாயம் இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

Beware of dating apps they may steal your data says latest report ans

ஒரு டேட்டிங் செயலியானது உங்களுக்கு விருப்பமான ஆண் துணையையோ? அல்லது பெண் துணையையோ பெற வழி வகுக்கிறது. இதற்காக உங்களுடைய புகைப்படம், முகவரி, வயது உள்ளிட்ட பிற தனிப்பட்ட தகவல்களை பெறுகிறது இந்த டேட்டிங் செயலிகள். ஆனால் அண்மையில் ஃபயர் ஃபாக்ஸ் நிறுவனத்தின் மோசில்லா நடத்திய ஒரு ஆய்வில், கிட்டத்தட்ட 25% டேட்டிங் செயலிகள் அதனை பயன்படுத்துபவர்களுடைய தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளது. 

ஒரு டேட்டிங் செயலியை பயன்படுத்துவதற்கு முன்பாக அதில் நம்முடைய உண்மையான முழு உருவ புகைப்படம், நாம் எங்கு வசிக்கின்றோம் என்ற தகவல், நமது வயது இன்னும் சில நேரங்களில் நமது அலைபேசி எண் உள்ளிட்ட பல தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டும். ஆனால் சில செயல்கள் இந்த தகவல்களை திருடி வேறு தனியாருக்கு விற்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று முன் வைக்கப்பட்டுள்ளது. 

1 TB ஸ்டோரேஜ்.. 45W சார்ஜிங்.. 5,000mAh பேட்டரி.. சாம்சங் கேலக்சி சி55 விலை எவ்வளவு தெரியுமா?

குறிப்பாக Hinge, Tinder, OKCupid, Match, Plenty of Fish பிளாக் பீப்பிள் மீட் ஆகிய செயலிகள் தங்களது பயனர்களின் லொகேஷன் தகவல்களை துல்லியமாக அணுகக்கூடிய வசதிகளை பெற்றுள்ளன என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வினை மேற்கொண்ட நிறுவனத்தின் கூற்றுப்படி, சில நேரங்களில் அந்த டேட்டிங் செயலிகளை நாம் இயக்கவில்லை என்றாலும் பேக்ரவுண்டில் அது செயல்பட்டு பாஸ்வேர்ட் போன்ற தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஆகவே எப்பொழுதும் ஒரு டேட்டிங் செயலியை பயன்படுத்தும் போது Third Party செயலிகள் மூலம் அதனை பயன்படுத்த வேண்டாம் என்றும், அந்த செயலில் உள்ள செட்டிங்ஸை அவ்வப்போது சரி பார்த்து தேவையற்ற அணுகல்களுக்கான வசதியை இடை நிறுத்துமாறு வல்லுனர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் எப்போது இந்த வகை செயலிகளை பயன்படுத்தும்போது கணவத்துடன் இருக்க வேண்டும். 

எச்சரிக்கை.. AI வாய்ஸ் குளோனிங் மூலம் பணத்தை திருடும் கும்பல்.. மோசடியில் இருந்து எப்படி தப்பிப்பது?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios