உங்களுக்கு ரேடியோ தொடங்க ஆசையா....? சமூக வலைத்தளங்களில் பிரபலம் அடைய வேண்டுமா ?
தொழில் நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது பல செயலிகள் அறிமுகம் செய்யப் பட்டு வருகிறது .
எது வேண்டுமென்றாலும் இருந்த இடத்திலிருந்தே ஆர்டர் செய்து பொருட்கள் வாங்குவது முதற்கொண்டு, வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்தும் வீடு தேடி வரும் நிலையை உருவாக்கி உள்ளது இன்றைய தொழில்நுட்பம்.
'டேட்டா மெயில்' என்ற ஆப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாக்கி உள்ளது . இந்த ஆப்ஸ் பயன்படுத்தி, தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி, உருது, சீனம் மற்றும் அரபி என, ஒன்பது மொழிகளில், 'இ - மெயில்' முகவரியை உருவாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ஆப்பில், ரேடியோ என்ற ஆப்ஷன் உள்ளது. இந்த ஆப்ஷனை பயன்படுத்தி, புது ரேடியோ ஒன்றை ஆரம்பிக்கலாம். அதே இந்த ரேடியோ சேனலை பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் ஒளிப்பரப்பலாம். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
ஆண்டாய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஸ் இயங்குதளத்திலும் இந்த ஆப்ஸ் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் . நீங்களும் ஒரு ரேடியோவை தொடங்க ஒரு வாய்பாக இருக்கும் .