அட இப்படிலாம் கூட வெப்சைட் இருக்கா! இதுதெரியாம போச்சே!!
அட இப்படிலாம் கூட வெப்சைட் இருக்கா என்று நம்மையே ஆச்சரியப்படுத்தும் பயனுள்ள சில இணையதளங்களைப் பற்றி இங்குக் காணலாம்.
பொழுதுபோக்கிற்கு மட்டும் அல்லாமல் நமக்கு தெரியாத பல விஷயங்களை கற்றுக்கொடுப்பதில் இணையதளங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் உங்கள் வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் குறிப்பிட்ட மூன்று இணையதளங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்:
1. உங்கள் வீட்டில் இருக்கும் பொருளை மட்டுமே பயன்படுத்தி சமையல் செய்யலாம் :
சமையலுக்கென எக்கச்சக்க இணையதளங்கள் யூடியூப் சேனல்கள் இருந்தாலும், அவற்றுள் குறிப்பிடத்தக்க இணையதளம் சூப்பர் குக் (Super Cook) ஆகும். இந்த இணையதளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு வகைகள் டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன இதிலுள்ள சிறப்பம்சமே, நாமே பொருட்களைத் தேர்வு செய்து, அந்தப் பொருட்களில் என்ன உணவு ரெசிபிகள் செய்யலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
இதற்கு உங்கள் மொபைலின் கூகுள் பக்கத்திற்கு செல்லவும். அதில் உள்ள சர்ச் பாரில் சூப்பர் குக் ( Super Cook ) என டைப் செய்து https://www.supercook.com/ என்ற வெப்சைட்டிற்கு செல்லவும். பின்பு, உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதை வைத்து என்ன வகையான உணவைத் தயாரிக்க முடியும் என்ற சமையல் குறிப்பு இடம் பெரும். அதை பயன்படுத்தி சூடான சுவையான உணவை நீங்கள் தாயார் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
2. அடிக்கடி கேம் விளையாடுபவரா நீங்கள்?
நீங்கள் விளையாடும் கேமின் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸை அறிந்து கொள்ளலாம். உங்கள் மொபைலின் கூகுள் பக்கத்தில் பிஃபோர் ஐ பிளே ( Before I play ) என தேடவும். https://beforeiplay.com/ என்ற வெப்சைட்டிற்கு செல்லவும். இதில் 2000 திற்கும் மேற்பட்ட கேம்களுக்குறிய டிப்ஸ் மற்றும் ட்ரிக்குகள் உள்ளன. இதை பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான கேமின் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸை படித்தறிந்து அதை சுவாரஸ்யமாக விளையாடுங்கள்.
3. வீட்டில் இருந்தே வெளிநாட்டிற்குச் செல்லலாம்:
உங்கள் மொபைலின் கூகுள் சர்ச் பாரில் ஜியோ கெஸ்சர் ( GeoGuessr ) என டைப் செய்யுங்கள். https://www.geoguessr.com/ என்ற வெப்சைட்டிற்கு சென்று பிளே ஃபிரீ நவ் (PLAY FREE NOW ) என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பிறகு உங்கள் திரையின் வலது புறத்தில் சைன் அப் ( SIGN UP ) , லாகின் ( LOGIN ) என இரண்டு ஆப்ஷன்கள் தோன்றும் அதில் லாகின் என்பதை தேர்வு செய்து லாகின் செய்து செய்யுங்கள். பிறகு உங்களை ஒரு சுவாரஸ்யமான வெளிநாட்டிற்கு அது அழைத்து செல்லும். மேலும் அது என்ன இடம் எங்கே உள்ளது அதன் சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்த அனைத்து தகவல்களையும் உங்களுக்கு வழங்கும்.