Asianet News TamilAsianet News Tamil

Airtel, Jio, Vi, BSNL எதில் குறைந்த கட்டணம்.. இதோ முழு விவரங்கள்!

இந்தியாவில் ரூ. 300க்குள் குறைந்தது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய, ஏர்டெல், ஜியோ, விஐ மற்றும் பிஎஸ்என்எல் வழங்கும் சிறந்த ரீசார்ஜ் பிளான்களை இங்குக் காணலாம்.

Best monthly prepaid plans under Rs 300 from Airtel, Jio, Vi, and BSNL, check details here
Author
First Published Dec 5, 2022, 4:23 PM IST

இந்தியாவில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களைப் பொறுத்தவரை, மாதாந்திர ரீசார்ஜ் பிளான்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இத்திட்டங்களை வழங்குகின்றன. அதிவேக இணையம், அன்லிமிடேட் கால் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட வசதியான பலன்கள் இதில் உள்ளன.

இந்த மாதம் உங்கள் சிம் கார்டை ரீசார்ஜ் செய்ய நீங்கள் திட்டமிட்டால், ரூ. 300 க்கும் குறைவான விலையிலுள்ளசில சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை கருத்தில் கொள்ளலாம். இந்த திட்டங்கள் வழக்கமாக 28 நாட்கள் வேலிடிட்டி, 4ஜி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால், வீடியோ கால்களுடன் வருகின்றன.

ஏர்டெல் ரூ.299 மாதாந்திர ரீசார்ஜ் பிளான்:

ஏர்டெல் ப்ரீபெய்ட் எண்ணை ரூ.299க்கு ரீசார்ஜ் செய்தால், நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடேட் லோக்கல் கால், எஸ்டிடி கால்கள் பெறலாம். ஒரு நாளைக்கு 1.5ஜிபி வரை 4ஜி டேட்டா என 28 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. கூடுதலாக, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ 299 மாதாந்திர ரீசார்ஜ் பிளான்:

ஏர்டெல்லைப் போலவே, ஜியோவும் 28 நாட்களுக்கு 2ஜிபி வரையிலான 4ஜி டேட்டாவுடன் ரூ.299க்கு மாதாந்திர ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது, இது ஏர்டெல் வழங்குவதை விட 512எம்பி அதிகம். ஏர்டெல் திட்டத்தைப் போலவே, ஜியோவிலும், நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் இலவச அன்லிமிடேட் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதிகளுடன் வழங்கப்படுகிறது.

Vi ரூ 299 மாதாந்திர ரீசார்ஜ் பிளான்:

Vi ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 299 மாதாந்திர ரீசார்ஜ் பிளான் கொண்டுள்ளது, மேலும் இந்த ரீசார்ஜ் பிளானின் சலுகைகள் அப்படியே ஏர்டெல் வழங்கும் சலுகையைப் போலவே இருக்கும். இந்த பிளானின்படி, ரீசார்ஜ் செய்த நாளிலிருந்து 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது, மேலும் எந்த நெட்வொர்க்குக்கும் இலவச அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.

Vi New Plan: 1 வருட வேலிடிட்டியுடன் 2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

BSNL ரூ.269 மாதாந்திர ரீசார்ஜ் பிளான்:

300 ரூபாய்க்கு கீழ் உள்ள ரீசார்ஜ் திட்டத்தில், நல்லதொரு நெட்வொர்க்கை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியாவிலுள்ள ரூ.299 திட்டத்தை விட பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் நல்ல திட்டம் உள்ளது. இது வெறும் ரூ.269க்கான திட்டம் ஆகும்.
BSNL ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.269க்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம், மேலும் ஒரு நாளைக்கு 2ஜிபி அதிவேக 4ஜி/3ஜி நெட்வொர்க் மற்றும் 80kpbs வேகத்தில் 30 நாட்களுக்கு இலவச அன்லிமிடெட் நெட்வொர்க்கைப் பெறலாம். இந்த பிளான் அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவை சந்தா ஆகியவற்றை வழங்குகிறது, இது இந்தியாவில் ரூ. 300க்கு கீழ் சிறந்த ப்ரீபெய்ட் திட்டமாகும்
 

Follow Us:
Download App:
  • android
  • ios