ரூ. 1 லட்சம் விலையில் கிடைக்கும் டாப் டக்கர் கேமரா மாடல்கள்...!
ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருப்பவர்கள் அடுத்து எண்ட்ரி லெவல் கேமராவை தேர்வு செய்யும் பட்சத்தில் ஏராளமான DSLR மாடல்கள் உள்ளன.
கேமரா வாங்கும் போது நம் பட்ஜெட்டிற்குள் சிறந்த மாடலை கண்டு பிடிப்பது மிகவும் சவாலான காரியம் எனலாம். சிறப்பான புகைப்படங்களை எடுப்பதற்கு தேவையான கேமரா ஒன்றும் அதிக விலை உயர்ந்தது இல்லை. ஆனால், நம் தேவைக்கு ஏற்ற சிறந்த கேமராவை தேர்வு செய்வது தான் முக்கியத் துவம் வாய்ந்தது. ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருப்பவர்கள் அடுத்து எண்ட்ரி லெவல் கேமராவை தேர்வு செய்யும் பட்சத்தில் ஏராளமான DSLR மாடல்கள் ரூ. 1 லட்சம் பட்ஜெட்டிலேயே கிடைக்கின்றன.
நத்திங் போன் (1) முன்பதிவு செய்தவர்கள் பணத்தை திரும்ப பெற இதை செய்தால் போதும்..!
இது மட்டும் இன்றி ஏராளமான மிரர்லெஸ் கேமரா மாடல்களும் கிடைக்கின்றன. அந்த வகையில் இந்திய சந்தையில் கிடைக்கும் கேமரா மாடல்களில் அனைவரின் தேவைக்கு ஏற்றார் போல் ரூ. 1 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் கேமரா எவை என தொடர்ந்து பார்ப்போம்.
கேமிங் போன்களில் முதல் முறை... அதிரடி அம்சங்களுடன் லான்ச்-க்கு ரெடியாகும் ரோக் போன் 6 சீரிஸ்..!
கேனான் EOS R10:
கேனான் EOS R10 இந்திய சந்தையில் ரூ. 1 லட்சம் விலையில் கிடைக்கும் சிறந்த மிரர்லெஸ் கேமரா மாடல் எனலாம். சுமார் 429 கிராம் எடை கொண்டு இருக்கும் கேனான் EOS R10 மாடலில் 24.2MP APS-C CMOS சென்சார் மற்றும் 1.6x க்ராப் ஃபேக்டர் உள்ளது. இந்த கேமரா நொடிக்கு 23 ஃபிரேம்களை படம் பிடிக்கும். இத்துடன் DIGIC X இமேஜ் பிராசஸர் உள்ளது. இந்திய சந்தையில் கேனான் EOS R10 மாடலின் விலை ரூ. 80 ஆயிரத்து 995 ஆகும்.
அவசரம் வேண்டாம்... 2 நாள் கழிச்சும் அழிச்சுக்கோங்க... வாட்ஸ்அப் வழங்கும் புது அம்சம்...!
நிகான் Z 30:
நிகான் நிறுவனத்தின் சிறிய மற்றும் எடை குறைந்த மிரர்லெஸ் கேமரா மாடலாக நிகான் Z 30 இருக்கிறது. 350 கிராம் எடை கொண்டு இருக்கும் நிகான் கேமரா வி-லாகிங் செய்வதற்கு ஏற்ற கேமரா எனலாம். இதில் வேரி-ஆங்கில் 3 இன்ச் டச் சென்சிடிவ் எல்.சி.டி. உள்ளது.
சோனி A6400:
இந்த கேமரா மாடல் சற்றே பழையது தான், எனினும், 2o22 ஆண்டில் சிறந்த மிரர்லெஸ் கேமராவாக சோனி A6400 இருக்கிறது. இதில் உள்ள தொடுதிரையை 180 டிகிரிக்களில் ப்ளிப் செய்யும் வசதி கொண்டு இருக்கிறது. இந்த சோனி கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் வசதி கொண்டுள்ளது. இந்திய சந்தையில் சோனி A6400 மாடல் விலை ரூ. 85 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஃபுஜிஃபில்ம் X-T30:
இந்த கேமராவில் 1.62 மில்லியன் டாட் எல்.சி.டி. பேனல், X Trans CMOS 4 சென்சார், X பிராசஸர் உள்ளது. இந்த கேமரா கொண்டு தலைசிறந்த புகைப்படங்கள் மட்டும் இன்றி 4K வீடியோக்களை 30fps தரத்தில் படமாக்க முடியும். இந்திய சந்தையில் ஃபுஜிஃபில்ம் கேமரா மாடல் விலை ரூ. 88 ஆயிரத்து 999 ஆகும்.
கேனான் EOS M50 Mark II:
கேனான் நிறுவனத்தின் புதிய M சீரிஸ் கேமரா இது ஆகும். வைபை கனெக்டிவிட்டி கொண்டு இருக்கும் கேனான் EOS M50 Mark II கொண்டு புகைப்படங்களை கேமராவில் இருந்து ஸ்மார்ட்போனிற்கு பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இந்த கேமராவில் 24.1MP CMOS சென்சார் உள்ளது. இதை கொண்டு 4K வீடியோக்களை படமாக்க முடியும். இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 58 ஆயிரத்து 995 ஆகும்.