ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நீண்ட பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்போன்கள்... டாப் 5 பட்டியல்..!
இன்ஃபினிக்ஸ், சாம்சங், டெக்னோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களில் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஸ்மார்ட்போன் மாடல் வாங்குவோர் பெரிய பேட்டரி இருக்கிறதா என்பதை தான் முதலில் கவனிக்கின்றனர். இன்றைய சூழலில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் பெரும்பாலான மாடல்களில் 5000mAh பேட்டரி யூனிட் வழங்கப்பட்டு வருகிறது.
இது தவிர ஸ்மார்ட்போன்களில் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கட்டாய அம்சமாக உள்ளன. சில ஸ்மார்ட்போன் பிராண்டுகள் 6000mAh அல்லது 7000mAh பேட்டரி வழங்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்ஃபினிக்ஸ், சாம்சங், டெக்னோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களில் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
6000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிடுவோர், ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த 6000mAh பேட்டரி ஸ்மார்ட்போன் மாடல்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே:
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ. 8 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 12 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட யுனிசாக் T610 பிராசஸர், 13MP பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
சியோமி ரெட்மி 10 பிரைம் 2022:
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் கொண்டு இருக்கும் ரெட்மி 10 பிரைம் 2022 ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி, 50MP பிரைமரி கேமரா, 8MP, 2MP மற்றும் 2MP லென்ஸ்கள், 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் கேலக்ஸி F22:
சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டு இருக்கும் சாம்சங் கேலக்ஸி F22 ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. 6000mAh பேட்டரி கொண்ட சாம்சங் கேலக்ஸி F22 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சியோமி ரெட்மி 10 பவர்:
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் கொண்டு இருக்கும் சியோமி ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 13 கொண்டிருக்கும் ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனின் விலை இந்திய சந்தையில் ரூ. 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
சியோமி ரெட்மி 10:
HD பிளஸ் டிஸ்ப்ளே கொண்டு இருக்கும் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அட்ரினோ 610 GPU மற்றும் 6000mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்திய சந்தையில் சியோமி ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10 ஆயிரத்து 998 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.