Russia Ukraine War: நாங்களும் செய்வோம்: செய்தி நிறுவனங்களுக்கு அதிரடி தடை விதித்த ரஷ்யா

Russia Ukraine War: போலி செய்திகளை வெளியிடுவதாக கூறி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய செய்தி நிறுவனங்களுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.

 

BBC Voice of America Deutsche Welle More Media Outlets Restricted by Russia Report

ரஷ்யா நாட்டு அரசு தகவல் தொடர்பு ஆணையம் பி.பி.சி., வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, ரேடியோ ஃபிரீ யூரோப் / ரேடியோ லிபெர்டி, டியூஷ் வெல் மற்றும் பல்வேறு இதர செய்தி நிறுவனங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த செய்தி நிறுவனங்கள் போலி செய்திகளை வெளியிடுவதாக அந்த ஆணையம் குற்றம்சாட்டி உள்ளது. 

உக்ரைன் மீதான படையெடுப்பு குறித்து போலி செய்திகளை இந்த நிறுவனங்கள் வெளியிட்டு வருவதாக ரஷ்ய அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். மாஸ்கோ இதனை சிறப்பு மிலிட்டரி ஆப்பரேஷன் என அழைக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேற்கத்திய நாடுகளை பொய்களின் பேரரசுஎன குறிப்பிட்டு இருக்கிறார்.  

BBC Voice of America Deutsche Welle More Media Outlets Restricted by Russia Report

"தொடர்ந்து திட்டமிட்ட பொய் அடங்கிய தகவல்களை வெளியிட்டு வருவதை அடிப்படையாக கொண்டு இந்த சேவைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது," என ரஷ்யா ஆணைய அதிகாரி தெரிவித்தார். "உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் சிறப்பு ராணுவ ஆப்பரேஷன், அதில் பின்பற்றும் வழிமுறைகள், சண்டைமுறை, ரஷ்ய படைகளின் இழப்பு உள்ளிட்டவை குறித்து போலி விவரங்கள் வெளியிடப்படுகின்றன," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பி.பி.சி., வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா உள்ளிட்டதளங்களின் ரஷ்ய மொழி தளங்கள் விர்ச்சுவல் பிரைவேட் நொட்வொர்க் உதவியின்றி பயன்படுத்த முடியாது. வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஆங்கில பதிப்பை மட்டும் இயக்க முடிந்தது. எனினும், பி.பி.சி. தளத்தை இயக்க முடியவில்லை. 

முன்னதாக பல்வேறு ஆட்டோமொபைல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் வியாபாரத்தை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்தன. மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சார்பில் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்தன. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios