ஜியோவால் "அவுட்" ஆன பார்தி ஏர்டெல்
ரிலையன்ஸ் ஜியோவால், அவுட் ஆன மற்ற நிறுவனங்கள்
ரிலையன்ஸ் ஜியோ
இலவச சேவையில் சிறந்து விளங்கும் ஜியோவால், மற்ற தொலைத்தொடர்பு துறையின் வருமானம் 20 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதாக இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது
2௦ முதல் 3௦ சதவீதம் குறைவு
டேட்டா வுக்கான கட்டணம் குறைவால் , வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் வருமானம் வெகுவாக குறைந்துள்ளது. அதாவது டேட்டா பயன்படுத்த ஜியோ வுக்கு போட்டியாக மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு , சலுகையை வாரி வழங்கின. இதன் விளைவாக மற்ற நிறுவனங்களுக்கு கிடைக்கும் வருமானம் வெகுவாக குறைந்துள்ளது.
மார்ச் வரை மட்டுமே சலுகை
ரிலையன்ஸ் ஜியோவின் சலுகை வரும் மார்ச் வரை மட்டுமே உள்ளதால், அதன் பிறகு தொலை தொடர்பு நிறுவனங்களின் வருமானம் பெருகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
கடுப்பில் பார்தி ஏர்டெல் :
ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவையால் மிகவும் பாதிப்புக்கு உள்ளான பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாபெரும் சரிவை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது