மீண்டும் பழைய வாட்ஸ் ஆப் “status” ...
வாட்ஸ் ஆப் ஒன்று போதும், உலகில் நடக்கக்கூடிய அனைத்தும் ஒரே இடத்தில நொடி பொழுதில் வந்தடையும் . யாருக்கு எது தெரிகிறதோ இல்லையோ ஆனால் வாட்ஸ் ஆப் மட்டும் அனைவருக்கும் தெரியும்.
ஒவ்வொரு நாளும் பல சிறப்பு சேவையை வாட்ஸ் ஆப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் status என்ற ஆப்ஷனில் நாம் அப்டேட் செய்வதை பார்த்து , வாட்ஸ் ஆப் லிஸ்டில் உள்ள அனைவரும் , நாம் எந்த மனநிலையில் உள்ளோம், பிசியாக உள்ளோமா இது போன்ற பல status போட முடியும் .
ஆனால், status போடும் ஆப்ஷனில், ஒரு மாற்றம் செய்து , வீடியோ கிளிப்பிக் மற்றும் ஸ்டிக்கர் போன்றவற்றை வைத்துக்கொள்ளும் ஒரு ஆப்ஷனை வாட்ஸ் அப்பில் கொடுக்கப்பட்டது.
ஆனால் பெரும்பாலான வாட்ஸ் ஆப் விரும்பிகள், பழைய வாட்ஸ்ஆப் status ஆப்ஷனையே விரும்புவதாலும், சமூக வலைத்தளங்களில் பலரும் பழைய status ஆப்ஷனையே விரும்புவதாக தெரிவித்து உள்ளனர் .
ஆண்ட்ராய்டு மொபைலில் பழைய whats aap status பெறுவதற்கு 2.17.107 பதிப்பை பயன்படுத்தலாம்.
இதன் காரணமாக மீண்டும் பழைய வாட்ஸ் ஆப் status பெறுவதற்கு வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்து செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று profile புகைப்படத்தை கிளிக் செய்தால் பழையபடி டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் வசதி வரும்.
பழைய வாட்ஸ் ஆப் status தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் வரும் . பின்னர் ஐஓஎஸ் இயங்குதளத்திலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .