Asus 8z price : அசுஸ் நிறுவனத்தின் புதிய 8z பிரீமியம் ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று துவங்குகிறது. 

அசுஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அசுஸ் 8z ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று மதியம் தொடங்குகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. காம்பேக்ட் ஃபிளாக்‌ஷிப் எனும் பிரிவில் இந்த ஸ்மார்ட்போன் 5.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மற்ற அம்சங்களை பொருத்தவரை 64MP பிரைமரி கேமராவுடன் டூயல் கேமரா செட்டப், ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 4000mAh பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

விலை விவரங்கள் 

அசுஸ் 8z ஸ்மார்ட்போனின் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 42,999 ஆகும். இதன் விற்பனை இன்று (மார்ச் 7) மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. புதிய அசுஸ் 8z ஸ்மார்ட்போன் ஹாரிசான் சில்வர் மற்றும் அப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

அசுஸ் 8z அம்சங்கள்

- 5.9 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED HDR 10+ 20:9 டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
- அட்ரினோ 660 GPU
- 8GB LPDDR5 6400MHz ரேம்
- 128GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ZenUI 8
- டூயல் சிம் ஸ்லாட் 
- 64MP கேமரா, 0.8μm பிக்சல், f/1.8, OIS
- 12MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, 4cm மேக்ரோ மோட், 8k வீடியோ
- 12MP செல்ஃபி கேமரா
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், FM ரேடியோ
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் யு.எஸ்.பி. டைப் சி
- 4000mAh பேட்டரி
- 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்