ரயில்கள் விலங்குகள் மீது மோதாமல் தடுக்க புதிய வழி… செயற்கை நுண்ணறிவு சாதனத்தை உருவாக்கியது BEL நிறுவனம்!!
ரயில்களில் அடிப்பட்டு வன விலங்குகள் உயிரிழப்பதை தடுக்க செயற்கை நுண்ணறிவை மையமாக கொண்டு இயங்கும் சாதனம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் அடிப்பட்டு வன விலங்குகள் உயிரிழப்பதை தடுக்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாதனம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தில் யானை, காண்டாமிருகம் உள்ளிட்ட வன விலங்குகள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரயில்கள் அதிக தொலைவில் இருந்தாலும், தண்டவாளத்தில் விலங்குகள் இருப்பதை ரயில் ஓட்டுநர்கள் கண்டறிய உதவும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாதனத்தை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) உருவாக்கியுள்ளது. இந்த சாதனம் WANRA என்றழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ‘எல்லோரும் எங்களை மன்னிச்சுருங்க’ - சாரி கேட்ட இன்ஸ்டாகிராம் நிறுவனம்!
இதுக்குறித்து ஏசியாநெட் நியூஸிடம் பேசிய BEL அதிகாரி ஒருவர், ரயிலின் முன் மற்றும் பின் பக்கங்களில் ஒரு கேமரா வைக்கப்படும். லோகோ ஆபரேட்டர் கேபினின் டிஸ்ப்ளேவில் தரவு ரெண்டர் செய்யப்படும். இதனால் ஓட்டுநருக்கு முடிவெடுக்க போதுமான நேரம் இருக்கும். இந்த முறையை நாங்கள் சமீபத்தில் இந்திய ரயில்வேக்கு முன்மொழிந்தோம். ரயில்களில் முன் மற்றும் பின் பக்கங்களில் கேமராக்கள் பொருத்தப்படுவதன் மூலம் ஓட்டுநர் விலங்குகளை அடையாளம் கண்டு அடுத்த நடவடிக்கைக்கு முடிவுகளை எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.
WANRA-வின் முக்கிய அம்சங்கள்:
WANRA நிகழ்நேரத்தில் வீடியோவின் தெரிவுநிலையை மேம்படுத்துகிறது. இதுமட்டுமின்றி லோகோமோட்டிவ் ஆபரேட்டர் கேபினின் காட்சியில் அதை வழங்குகிறது. இந்த அமைப்பு மூலம் வயது வந்த யானைகள் மற்றும் காண்டாமிருகத்தை 1000மீ தூரம் வரை கண்டறிய முடியும். இது விலங்குகளைக் கண்டறிதல் மற்றும் வகைப்படுத்துவதற்கான PyTorch செயல்படுத்தலுடன் கூடிய அதிநவீன ஆழ்ந்த கற்றல் மாதிரியைக் கொண்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் யானைகள் மற்றும் காண்டாமிருகங்கள் போன்ற காட்டு விலங்குகளைக் கண்டறிந்து அடையாளம் காணும் போது இந்த அமைப்பு ஆடியோ-விஷுவல் அலாரத்தை உருவாக்குகிறது. இது ஒரு வார காலத்திற்கு வீடியோ தரவை பதிவுசெய்து சேமிக்க முடியும்.
இதையும் படிங்க: இனி உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பலாம்!
WANRA அமைப்பின் விவரக்குறிப்புகள்:
- ஐஆர் டிடெக்டர் தீர்மானம்: VGA 640*480
- கேபின் காட்சி அலகு அளவு 10.1"
- IP67 நீர்ப்புகா சூரிய ஒளி படிக்கக்கூடிய எல்சிடி
- கேபின் காட்சி அலகு தீர்மானம்: 1024*768
- செயலாக்க அலகு: என்விடியா ஜெட்சன் ஏஜிஎக்ஸ் சேவியர் தொழில்துறை தொகுதி
- பவர் சப்ளை: இன்புட் சப்ளைக்கான DC-DC மாற்றி 72V அல்லது 110v DC இன்ஜின் வகைக்கு.
சமீபகாலமாக, ரயில் தண்டவாளத்தில் விலங்குகள் கொல்லப்பட்ட சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. அரசாங்க தரவுகளின்படி, 2019 மற்றும் 2021 க்கு இடையில் 45 யானைகள் ரயில் தண்டவாளத்தில் கொல்லப்பட்டன. இவற்றில் 15 இறப்புகள் கவுகாத்தியை தலைமையிடமாகக் கொண்ட வடகிழக்கு எல்லை ரயில்வேயின் கீழ் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.