apr 1 onwars vikalp introduced said railway department
ஏப்ரல் 1 முதல் டிக்கெட் முன்பதிவில் பெரிய மாற்றம்....”விக்லப்“...
வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், ரயில் டிக்கட் முன்பதிவு செய்வதில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சகம் தெரிவத்துள்ளது
ATAS எனப்படும் ”விக்லப்“ முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .அதன்படி,காலியாக செல்லும் ரயில்களில் உள்ள உள்ள சீட்டுக்களை நிரப்ப முடியும்.
பயன்கள் :
எந்த ரயிலில் பயணம் செய்யவேண்டுமோ அதில் முன்பதிவு செய்யும் போது, அதே வழித்தடத்தில் செல்லக் கூடிய மற்றொரு ரயிலில் சீட் காலியாக இருக்கும் தருவாயில் இந்த முறை மூலம் இடத்தை நிரப்ப முடியும்.
மேலும் பயணிகள் சரியான நேரத்தில் தாங்கள் செல்லும் இடத்தை அடைவர். அவர்களுக்கு தேவையான இருக்கைகள் மாற்று ரயில் சேவையில் கிடைப்பதால், பயணம் செய்வதில் சிரமம் இருக்காது.
முன்பதிவு செய்யும் போது மாற்று ரயில் வசதி பெறுவதற்கு, இ-டிக்கெட்டுகள் மூலமாக மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வில்கப் முறையை தேர்வு செய்யும் பயணிகளின் டிக்கெட், மற்ற பயணிகளுக்கு சார்ட் தயாரித்த பிறகே உறுதி செய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது
