இதுவரை இல்லாத அளவு அதிக சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்?

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு இலையுதிர்கால நிகழ்வில் இதுவரை இல்லாத அளவு அதிக சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Apple Said ro launch widest range of products this year gurman

ஆப்பிள் நிறுவனம் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு அதிக சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் வரலாற்றில் இல்லாத அளவு இம்முறை அதிக ஹார்டுவேர் சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

பிரபல ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மன் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் போன்ற ஐபோன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுதவிர புதிதாக மேம்பட்ட மேக்புக் ப்ரோ, பெரிய டிஸ்ப்ளேக்கள் கொண்ட புதிய ஐமேக், மேக் ப்ரோ, புது டிசைன் கொண்ட மேக்புக் ஏர், இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் ப்ரோ, மூன்று ஆப்பிள் வாட்ச் மாடல்கள், குறைந்த விலை ஐபேட், புதிய ஐபேட்  ப்ரோ உள்ளிட்ட சாதனங்களை ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார்.

Apple Said ro launch widest range of products this year gurman

இதுதவிர இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் ஆப்பிள் 5ஜி வசதி கொண்ட ஐபோன் எஸ்.இ. , மேம்பட்ட ஐபேட் ஏர், ஒரு மேக் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி எம்1 ப்ரோ சிப்செட் கொண்ட மேக், ஹை எண்ட் ஐமேக், மேக் மினி போன்ற சாதனங்களை ஆப்பிள் தனது ஸ்ப்ரிங் நிகழ்வில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. 

முந்தைய தகவல்களில் ஆப்பிள் இந்த ஆண்டு செப்டம்பர் மாத நிகழ்வில் ஐபோன் 14 சீரிஸ் - ஐபோன் 14, ஐபோன் 14 மினி, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்  என நான்கு மாடல்களை அறிமுகம் செய்யும் என கூறப்பட்டு வந்தது. இத்துடன் சில மேக்புக் மாடல்கள் அல்லது புது ஏர்பாட்ஸ் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios