Iphone 13 discount price : ஐபோனுக்கு ரூ. 11 ஆயிரம் விலை குறைப்பு - அமேசான் அதிரடி

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலை வாங்க திட்டமிடுவோர் அமேசான் வழங்கும் அதிரடி சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Apple iPhone 13 gets up to Rs 11,000 discount on Amazon

ஆப்பிள் நிறுவன்த்தின் புதிய ஐபோன் 13 மாடலுக்கு அமேசான் தளத்தில் ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ஐபோன் 13 விலை ரூ. 79,990 என நிர்னணயம்  செய்யப்பட்டு உள்ளது. அமேசான் தளத்தில் விலை குறைப்பின் படி இந்த மாடல் ரூ. 74,990-க்கு கிடைக்கிறது. இத்துடன் வங்கி சார்ந்த சலுகைகளை சேர்க்கும் போது ஐபோன் 13 விலை மேலும் குறையும்.

இந்த சலுகை 128GB, 256GB மற்றும் 512GB மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு மற்றும் வங்கி சலுகைகளின் கீழ் ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் சேர்த்து ரூ. 11 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. விலை குறைப்பின் படி ஐபோன் 13 128GB மாடல் விலை ரூ. 68,900 என்றும் 256GB மற்றும் 512GB விலை முறையே ரூ. 78,900 மற்றும் ரூ. 98,900 என மாறி இருக்கிறது. கேஷ்பேக் தொகை 90 நாட்களுக்கு பிறகே பயனரின் கார்டில் பிரதிபலிக்கிறது. 

Apple iPhone 13 gets up to Rs 11,000 discount on Amazon

அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, 2532x1170 பிக்சல் ரெசல்யூஷன், ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 4GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.  இந்த ஸ்மார்ட்போன் 128GB, 256GB மற்றும் 512GB என மூன்று வித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

இத்துடன் ஐ.ஓ.எஸ். 15, 12MP டூயல் கேமரா கேமரா சென்சார்கள், ஒரு பிரைமரி கேமரா மற்றும் ஒரு அல்ட்ரா வைடு கேமரா, 12MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 13 மாடல் 3240mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios