Amazon, Flipkart Offer 2023 விற்பனை தொடங்கியது.. பொருட்களை வாங்குவதற்கு முன் இந்த டிப்ஸ் பாருங்கள்!

இந்தாண்டு பொங்கல் திருவிழா, குடியரசு தினத்தை முன்னிட்டு அமேசான், பிளிப்கார்ட்டில் ஆஃபர் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அவற்றில் பொருட்களை ஆர்டர் செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான டிப்ஸ் ஒன்றை இங்குக் காணலாம்.

Amazon Flipkart Republic Day sale live, must-know tips you should try this offer days

இணைய வர்த்தக உலகில் அமேசான், பிளிப்கார்ட் தளங்கள் முன்னனியில் உள்ளன. பொதுவாக ஆன்லைன் ஷாப்பிங்கில் ஒரு பொருளின் விலையானது எல்லா நாளிலும் ஒரே மாதிரி இருக்காது. புத்தாண்டு சிறப்பு விற்பனை, குடியரசு தின விற்பனை, கிரேட் இந்தியன் பெஸ்டிவெல் என பல்வேறு வகையான சலுகைகள் அறிவிக்கப்பட்டு, பொருட்கள் விற்பனையாகின்றன. அந்த வகையில் தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு அமேசான், பிளிப்கார்ட்டில் சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. இது வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்த சிறப்பு ஆஃபர் விற்பனை நாட்களில்  நாம் வாங்கும் பொருளின் விலையானது தங்கம் வெள்ளி விலை போல மாறிக்கொண்டே இருக்கும்.  உதாரணத்திற்கு ஒரு ஹெட்சேட் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். அந்த ஹெட்செட்டின் விலை நேற்று 300 ரூபாயாகவும், இன்று அதன் விலை 350 ரூபாயாகவும் இருக்கலாம். இன்னும் 5 நாள் கழித்து ஹெட்செட்டின் விலை எந்த அளவு வேறுபட்டு இருக்கும் என்றும் தெரியாது. இந்த விலை மாற்றங்கள் சலுகைகள் அனைத்தும் அமேசான் விற்பனையாளர், வங்கி சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு காரணமாக நிகழ்கிறது. 

எனவே, நாம் வாங்க நினைக்கும் பொருளானது, அதன் விலை குறைக்கப்பட்ட நாளில் தான் வாங்குகிறோமா என்பது முக்கியமானது. இதற்காக குறிப்பிட்ட அந்த பொருளின் முந்தைய விலை குறைப்பு நாட்களையும், இனி குறையப் போகும் நாளையும் பார்க்க வேண்டும். 

இவ்வாறு பார்ப்பதற்கு பல்வேறு செயலிகள், இணைய உலாவிகள், இணையதளங்கள் உள்ளன. எளிமையாகப் பார்ப்பதற்கு  https://www.pricebefore.com அல்லது https://pricehistoryapp.com என்ற தளத்தைப் பயன்படுத்தலாம். 

Amazon அல்லது Flipkart இவற்றில் எந்த தளத்தில் வேண்டுமானாலும், நாம் வாங்க நினைக்கும் பொருளைத் தேடி, அந்த தயாரிப்பின் லிங்க் காப்பி செய்து, https://www.pricebefore.com அல்லது https://pricehistoryapp.com தளத்தில் பேஸ்ட் செய்ய வேண்டும். இப்போது நீங்கள் தேடிய பொருளின் அதிகபட்ச விலை எவ்வளவு, குறைந்தபட்ச விலை எவ்வளவு, எந்தெந்த காலக்கட்டங்களில் விலை குறைந்துள்ளது உள்ளிட்ட விவரங்களைக் காணலாம்.

மேலும், இதற்கு பிறகு விலை குறைந்தால், அது குறித்து நோட்டிபிகேஷன் வர வைக்கும்படியும் அமைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் விரும்பிய பொருளை, குறைந்த விலையில், நிறைவான முறையில் வாங்கிக் கொள்ளலாம்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios