ஏர்டெல் மீது ஜியோ பரபரப்பு புகார் ... விளம்பர கவுன்சில் நடவடிக்கை எடுக்குமா ?
ஏர்டெல் மீது, ஜியோ சரமாரி குற்றசாட்டை எடுத்து வைத்துள்ளது .இது தொடர்பாக ஜியோ தெரிவித்துள்ளது என்னவென்றால், இந்தியாவில் அதிகாரபூர்வமாக அதிவேகமான இன்டர்நெட் சேவையை ஏர்டெல் வழங்குகிறது என்ற விளம்பரம் பொய்யான ஒன்று என ஜியோ இந்திய விளம்பர கவுன்சிலில் புகார் தெரிவித்துள்ளது .
ஏர்டெல் அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்குகிறது என ஊக்லா நிறுவனம் தெரிவித்துள்ளதற்கும், ஜியோ தகவல் அனுப்பியுள்ளது.
ஜியோ வைத்த குற்றசாட்டு என்ன ?
Officially The Fastest Network என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. Officially என்ற வேர்ட் பயன்படுத்தும் போது ட்ராய் அல்லது தொலை தொடர்பு முறையை மட்டுமே குறிக்கும் எனவும், ஊக்லா நிறுவனம் இந்திய அரசால் அங்கீகரிக்கபடாத ஒரு நிறுவனம், இது எப்படி ஏர்டெல் குறித்து சரியான கருத்தை தெரிவித்து இருக்க முடியும் என கேள்வி எழுபியுள்ளது.மேலும், வியாபார நோக்கத்தில் பணத்திற்காக தவறான விருதுகளை வழங்கியுள்ளது எனவும் ஜியோ குற்றம் சாடியுள்ளது.
இதற்கு பதிலளித்த ஏர்டெல் நிறுவனம், ஊக்லா நிறுவனம் மற்ற தொலைதொடர்பு நிறுவனத்தின் இணைய சேவையை சோதிப்பதில் மிகவும் பிரபலமானது எனவே சரியான முறையில் தான் பரிசோதனை செய்து ஏர்டெல் அதிவேக இணைய சேவையை வழங்குகிறது என தெரிவித்தது .