தொடங்கப்பட்டது ஏர்டெல் பேமண்ட் வங்கி.....! இனி அனைத்து சேவைகளும் ஒரே நிமிடத்தில் ..!!

airtel payment-bank

பிரதமர்  மோடி  , பழைய  ரூபாய் நோட்டு  செல்லாது  என  அறிவித்ததை  தொடர்ந்து , தற்போது  ரொக்க  பணம் அனைத்தும்  வங்கியில்  செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  ரொக்கமில்லா பரிவர்த்தனை   மேற்கொள்வதை  இந்தியா  ஊக்கப்படுத்துகிறது.

இதனால், பேடிஎம்  உள்ளிட்ட  பல  செயலிகள் பொதுவாக  மக்களால்  பயன்படுத்தப்பட்டு  வருகிறது.

இந்நிலையில் தற்போது, பிரபல  தொலை தொடர்பு நிறுவனமான, ஏர்டெல் , இன்று தனது புது சேவையான  ஏர்டெல் பேமண்ட் வங்கியை   டெல்லியில்  தொடங்குகிறது.இந்த   விழாவை நிதியமைச்சர்  அருண்  ஜெட்லி தொடங்கி வைக்கிறார்.உடன்  பாரதி  குரூப்  சேர்மன் சுனில்  பாரதி  மிட்டல் கலந்து கொள்கிறார் .

கணக்கு  தொடங்குவது எப்படி ?

  • ஆதார்  அட்டை  மட்டும்  போதுமானது.
  • e- Kyc   ப்ராசஸ் மூலம் எளிதில்  வங்கி  கணக்கு  தொடங்கமுடியும்.
  • மேலும்  பயோமெட்ரிக் இன்புட்ஸ் எடுக்கப்படும். அதாவது  நம்  கண்  விழித்திரை  ஸ்கேன்  செய்யப்படும்,

ஏர்டெல் பேமண்ட்ஸ் பயன்பாடு :

எளிதில்   பண பரிவர்த்தனை  செய்ய முடியும்.

ஒரு  லட்சம்  வரை  டெபாசிட்  செய்து கொள்ளலாம்.அதற்கான  வட்டி 7.5    சதவீதம்  வழங்குகிறது.

மற்ற தனியார்  வங்கிகளில்  6 சதவீதம் மற்றும் 4 சதவித  வட்டி மட்டுமே  கொடுக்கப்படுகிறது.

மேலும்  ஒரு  லட்சம்   ரூபாய்  வரை அச்ஸிடெடல் இன்சூரன்ஸ் வழங்குகிறது.

தவிர, நாம்   எவ்வளவு  பணத்தை , ஏர்டெல்  வங்கி  கணக்கில்  டெபாசிட்  செய்கிறோமோ,  அந்த  பணத்தின்  மதிப்புக்கு  ப்ரீ வாய்ஸ் கால்  மேற்கொள்ள  முடியும் .

இதன் மூலம்  மற்ற  எந்த  வங்கி கணக்கிற்கும்  பரிவர்த்தனை  செய்ய முடியும். மேலும் பல  சலுகையை  வழங்குகிறது ஏர்டெல் பேமண்ட் வங்கி

இந்த  வசதி , தற்போது  மக்களிடையே  நல்ல வரவேற்பை   பெரும்  என  எதிர்பார்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios