ஏர்டெல் நிறுவனம் ஜியோஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் 3 திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களின் வேலிடிட்டி, டேட்டா குறித்து பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல், நாடு முழுவதும் 38 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களுக்கு சேவை வழங்கி வருகிது. இந்நிலையில் ஏர்டெல் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுடன் வருகின்றன. இந்த பிளான்கள் குறித்து விரிவாக பார்ப்போம். 

ஏர்டெல்லின் ரூ.398 திட்டம்

* 28 நாட்கள் செல்லுபடியாகும்

* அனைத்து உள்ளூர் மற்றும் எஸ்டிடி நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு

* 2 ஜிபி தினசரி டேட்டா (மொத்தம்: 56 ஜிபி)

* ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்

* 28 நாட்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தா

அதிவேக டேட்டா வரம்பற்ற அழைப்புகள் மற்றும் OTT பொழுதுபோக்கை விரும்பும் பயனர்களுக்கு இந்தத் திட்டம் சரியானது.

ஏர்டெல்லின் ரூ.1,029 திட்டம்

* 84 நாட்கள் செல்லுபடியாகும்

* அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு

* 2 ஜிபி தினசரி அதிவேக டேட்டா

* வரம்பற்ற 5G டேட்டா (கிடைக்கும் இடங்களில்)

* 84 நாட்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தா

கிட்டத்தட்ட மூன்று மாத சலுகைகளுடன், தடையற்ற டேட்டா, தடையற்ற அழைப்புகள் மற்றும் பிரீமியம் OTT அணுகலை விரும்புவோருக்கு இந்த திட்டம் சிறந்தது.

ஏர்டெல்லின் ரூ.3,999 திட்டம்

*365 நாட்கள் செல்லுபடியாகும் காலம்

* அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற இலவச அழைப்பு

* 2.5GB தினசரி அதிவேக டேட்டா

* ஆண்டு முழுவதும் இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தா

பிரீமியம் சலுகைகளுடன் நீண்ட கால ரீசார்ஜை விரும்பும் கனரக பயனர்களுக்கு இந்தத் திட்டம் சரியானது, 

இந்த மூன்று ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களின் மூலம், பயனர்கள் இலவச ஜியோஹாட்ஸ்டார் அணுகலை அனுபவிக்க முடியும். ஜியோவும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளமும் இணைந்து அண்மையில் 'ஜியோ ஹாட்ஸ்டார்' உருவானது. இதன்மூலம் திரைப்படங்கள், டிவி சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் வெப்சீரிஸ்களை பார்க்க முடியும். 

மேலும் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்ரத்து ரசிக்க முடியும். ஜியோ ஹாட்ஸ்டாருக்கு தனியா சந்தா கட்டணம் அதிகமாக உள்ளது. ஆனால் ரீசார்ஜ் நிறுவனங்களுடன் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை பெற்றால் உங்களுக்கு டேட்டா, காலிங் வசதி, எஸ் எம் எஸ் வசதியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.