ஏர்டெல்லின் முக்கிய ஐந்து சேவைகள் இந்த ஊரடங்கில் உங்களுக்காக!

ஊரடங்கில் நம் அனைவருமே இணையதள சேவை மூலமாகவே நம் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் வீடியோ மூலமாகவும் மெசேஜ் மூலமாகவும் பேச முடியும். ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் உங்களுக்கான அனைத்து இணையதள சேவைகளையும் ஏற்படுத்தி உள்ளது .

airtel gives 5 major services to customers in lockdown period

ஏர்டெல்லின் முக்கிய ஐந்து சேவைகள் இந்த ஊரடங்கில் உங்களுக்காக!

கொரோனா வைரஸ் உலகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இன்று இந்தியாவில் ஊரடங்கில் உள்ளோம். மக்கள் வெளியெ செல்லமுடியாத நிலையில் வீட்டில் இருந்தே வேலை பார்க்கிறோம். தினசரி உணவு வாங்கவே திண்டாட்டம் ஆன நிலையில் வீட்டில் இருக்க பழகி கொண்டு இருக்கிறோம்.வீட்டில் இருக்கும் உங்களுக்காக முக்கிய ஐந்து சேவைகள். இதோ!

தினசரி தேவை

இந்த ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகள் தட்டுப்பாடுகள் இல்லாமல் இணையதளம் மூலமே பெற முடிகிறது. தினசரி தேவைப்படும் பால்,ரொட்டி, காய்கறிகள், அரிசி, கோதுமை தேவையான அளவு கிடைக்கின்றது. கிடைக்காதவர்கள் இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்

இணையதள ரீச்சார்ஜ்:

இந்த ஊரடங்கில் நம் அனைவருமே இணையதள சேவை மூலமாகவே நம் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் வீடியோ மூலமாகவும் மெசேஜ் மூலமாகவும் பேச முடியும். ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் உங்களுக்கான அனைத்து இணையதள சேவைகளையும் ஏற்படுத்தி உள்ளது . எண்ணில் அடங்காமல் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் பெருகி உலாவர ஏர்டேல் தேங்க்ஸ் ஆப் இல் உங்கள் மொபைல் ரீச்சார்ஜ் , DTH ரீச்சார்ஜ் அனைத்தையும் சுலபமாக செய்யலாம்

 

உடல் பயிற்சி:

மக்கள் ஓடி ஆடி வேலை செய்ய இயலாத காரணத்தால் அவர்களின் உடல் நிலை மாறலாம். இருப்பினும் இணையதளம் மூலமாக உடற்பயிற்சி சேவைகளை வீட்டிலேயே செய்யலாம் . யோகா, மெடிடேஷன் என உங்களை அமைதியாக வைத்து கொள்ள உதவும் பயிற்சிகளை செய்யலாம்.

மருந்துகள்:

நம் அத்தியாவசிய தேவைகளில் முக்கிய பங்கு வகிப்பது நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து. இந்த ஊரடங்கில் மேட்ப்ளஸ், மெட்லிபி போன்ற சேவைகளை பயன்படுத்தி மருந்துகளை இணைய சேவைகளில் வாங்கி கொள்ளலாம். இந்த கொரோனா வைரஸிற்கு தேவைப்படும் சானிடைஸிர்கள், மாஸ்குகள் அனைத்துமே இணைய சேவையில் கிடைக்கும்.

பொழுதுபோக்கு:

நாம் நேரத்தை பொழுது போக்க நம் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதே முக்கிய வழி.அதற்கு நெட்டபிலிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற தளங்களில் படம் பார்த்து மகிழலாம். மேலும் உங்கள் நேரத்தை கழிக்க உங்கள் மொபைல் மற்றும் கணினியில் புபிக், கொண்டெர்ஸ்ட்ரிக்கே போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். மேலும் வெப்செரிஸ் பார்த்து மகிழலாம். முக்கியமான ஒரு விஷயம் என்னவெனில் இந்த ஊரடங்கில் உங்களை நீங்கள் தனிமை படுத்தி கொள்வதே முக்கியமாகும். இந்த சேவைகளை சீராக பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் நெருங்கிய நண்பர்கள் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் அழைத்து பேசிகொள்ளலாம் 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios