ஜியோவிற்கு எதிராக ஏர்டெல் அதிரடி....! அன்லிமிடெட் வாய்ஸ் கால் முற்றிலும் ப்ரீ ப்ரீ ...
ஜியோவின் அதிரடி சலுகையால் ஆடிப் போன , மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் , தற்போது ஜியோ உடனான போட்டியை சமாளிக்க பல யுக்திகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளது . அதன் முதல் கட்டமாக ஏர்டெல் நிறுவனம் தனது பிரிபேய்ட் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான சலுகையை அறிவித்து உள்ளது
ஐடியா, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அதிக டேட்டா உள்ளிட்டவற்றை வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஏர்டெல் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
ஏர்டெல் வழங்கும் இரண்டு புதிய திட்டங்கள்
ரூ.345 திட்டம்
1 ஜிபி டேட்டா
அன்லமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் அனைத்து நெட்வொர்க்கும் பொருந்தும்
வேலிடிட்டி - ஒரு மாதம்
மாதந்தோறும் இதே சலுகையை பயன்படுத்த வேண்டுமென்றால், இதே தொகையை செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் . இந்த சலுகை ஒரு வருடத்திற்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது
ரூ.145 திட்டம்
2ஜிபி டேட்டா,
ஏர்டெல் டூ ஏர்டெல் எண்களுக்கு மட்டும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்
குறிப்பு
4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு மட்டுமே இந்த திட்டம் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் தகவல்