Airtel 5G வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! புதிதாக 5ஜி சிம் வாங்கத் தேவையில்லை!!

வாடிக்கையாளர்கள் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் சிம் கார்டில், ஏற்கெனவே 5ஜி தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் அம்சம் உள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.
 

Airtel 5G customers do not need to purchase a new 5G SIM

5ஜி நெட்வொர்க் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள நிலையில், ஜியோவும், ஏர்டெலும் போட்டிப்போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்த நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓ கோபால் விட்டல் தற்போது செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 5ஜி குறித்தும் அதன் சிறப்பம்சங்களை குறித்தும் விளக்கியுள்ளார். 5ஜிக்கு ஏன் மாற வேண்டும், 5ஜியின் பலன்கள் என்ன, 5ஜிக்கு மாறுவது எப்படி உள்ளிட்ட விவரங்களை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:WhatsApp-ல் இனி ஸ்கோரல் செய்து மெசேஜ்களைப் பார்க்கத் தேவையில்லை.. வரப் போகிறது புதிய அப்டேட்!

அதன்படி, வாடிக்கையாளர்கள் தற்போது பயன்படுத்தும் 4ஜி சிம் கார்டையே 5ஜிக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம், புதிதாக 5ஜி சிம் கார்டு வாங்க தேவையில்லை. அடுத்த மாதம் முக்கிய நகரங்களில் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டு, 2023 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வழங்கப்படும்.  4ஜியைக் காட்டிலும் 20-30 மடங்கு வேகத்தில் 5ஜி செயல்படும். எனவே, வாடிக்கையாளர்கள் இன்னும் மேம்பட்ட இணைய வசதியை அனுபவிக்கலாம்.

இனி புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமென்றால், 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குங்கள். ஏற்கெனவே 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள், அந்த ஃபோன் ஒரு ஆண்டுக்குள்ளாக இருந்தால், அதையே பயன்படுத்தலாம். உங்கள் 5ஜி ஸ்மார்ட்போனில் 'கனெக்ஷன்' என்ற மெனுவிற்குச் சென்று, 5ஜி என்று தேர்ந்தெடுத்தாலே போதும், உங்கள் 4ஜி சிம், 5ஜி ஆக மாறிவிடும். 

மேலும் படிக்க:விபரீதம் அறியாமல் தலையணைக்கு அடியில் ஸ்மார்ட்போன் வைத்துவிட்டு தூங்கினால் இப்படி தான் ஆகும்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios