நோக்கியா "செங்கல் போன் 3310 " மீண்டும் வருகிறது....உங்களுக்கு வேண்டுமா ?
பிப்ரவரி 26 ஆம் தேதி நடக்க உள்ள, சர்வதேச மொபைல் காகிரஸ் விழாவின் போது, மிகவும் பிரபலமான நோக்கியாவின் 3310 போன் மீண்டும் வெளியிடப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட் போன்:
ஸ்மார்ட் போன்ஸ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல வளர்ச்சி அடைந்த தொழில் நுட்பத்தை ஸ்மார்ட் போன்ஸ் கொண்டுள்ளது. இந்நிலையில், இதற்கு முன்னதாக நோக்கியா வெளியிட்ட 3310 போன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து தற்போது மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளது நோக்கியா
சிறப்பம்சங்கள் :
நல்ல உறுதி தன்மை கொண்டது
பேட்டரி அதிக நேரம் தாங்க கூடியது
கீழே விழுந்தாலும் பிரச்னை இல்லை
பெரியவர்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் ஏதுவான ஒன்று ....
இது போன்ற பல சிறப்பம்சங்களை கொண்ட,3310 மாடல் கொண்ட நோக்கியா போன் மீண்டும் வெளியிட்டால், விற்பனை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.