Asianet News TamilAsianet News Tamil

Disney+ Hotstar : நெட்ஃபிளிக்ஸ்-சை தொடர்ந்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் அறிவிப்பு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் அறிவிப்புக்கு பிறகு டிஸ்னி ஹாட்ஸ்டாரும் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

After Netflix, Disney Hotstar India planning to limit account sharing
Author
First Published Jul 28, 2023, 11:09 AM IST

நெட்ஃபிளிக்ஸ்(Netflix) நிறுவனத்தின் அறிவிப்புக்கு பிறகு, இந்தியாவில் மற்றொரு ஸ்ட்ரீமிங் நிறுவனமான  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பயனர்களுக்கு கடவுச்சொல் அதாவது பாஸ்வேர்ட் பகிர்வு குறித்து முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. தற்போது வெளியான அறிக்கைகளின்படி, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் பிரீமியம் பயனர்களிடையே கடவுச்சொல் பகிர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரீமியம் பயனர்கள் நான்கு சாதனங்களிலிருந்து மட்டுமே உள்நுழைய அனுமதிக்கும் புதிய கொள்கையைச் செயல்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடுகிறது. குறிப்பாக டிஸ்னியின் குறிப்பிடத்தக்க சந்தையில், கடவுச்சொல் பகிர்வின் சிக்கலைத் தீர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, டிஸ்னி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து இதனை அறிவித்துள்ளது. மே மாதத்தில், டிஸ்னியின் ஸ்ட்ரீமிங் போட்டியாளரான நெட்ஃபிளிக்ஸ் ஏற்கனவே 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இதேபோன்ற கொள்கையை அமல்படுத்தியது. சந்தாதாரர்களுக்கு தங்கள் வீட்டிற்கு வெளியே உள்ளவர்களுடன் சேவையைப் பகிர்வதற்கு கூடுதல் கட்டணம் தேவைப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 1 முதல் அதிரடி மாற்றங்கள்.. சிலிண்டர் விலை முதல் வங்கி விடுமுறை வரை - முழு விபரம் இதோ !!

தற்போது, இந்தியாவில், பிரீமியம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கணக்கு ஆனது 10 சாதனங்களில் உள்நுழைய அனுமதிக்கிறது. பிரீமியம் கணக்குகளுக்கு அதிகபட்சம் நான்கு சாதனங்களுக்கு உள்நுழைவுகளை கட்டுப்படுத்துவதே முதன்மை நோக்கமாகும். டிஸ்னி, நெட்ஃபிளிக்ஸ், அமேசான் மற்றும் ஜியோசினிமா ஆகியவை இந்தியாவில் பெரும் புகழைப் பெற்றுள்ளன.

மீடியா பார்ட்னர்ஸ் ஏசியாவின் கூற்றுப்படி, இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சந்தை 2027 ஆம் ஆண்டில் $7 பில்லியன் தொழில்துறையாக வளரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 50 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டு, பயனர்களின் அடிப்படையில் ஹாட்ஸ்டார் சந்தையில் முன்னணியில் இருப்பதாக தொழில்துறை தரவு குறிப்பிடுகிறது. இந்தியாவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நான்கு சாதன உள்நுழைவுக் கொள்கையை முன்னரே அமல்படுத்தவில்லை.

ஏனெனில் அவர்கள் பிரீமியம் பயனர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. கூடுதலாக, பிரீமியம் சந்தாதாரர்களில் சுமார் 5% மட்டுமே நான்கு சாதனங்களுக்கு மேல் உள்நுழைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இருப்பினும், வரவிருக்கும் மாற்றங்களுடன், இரண்டு சாதனங்களுக்கு மட்டுமே பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் மலிவான திட்டத்திற்கும் கட்டுப்பாடு பொருந்தும்.

டிஸ்னியின் ஹாட்ஸ்டார் ஜனவரி 2022 மற்றும் மார்ச் 2023 க்கு இடையில் இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சந்தையில் 38% பார்வையாளர்களைக் கைப்பற்றியதாக ஆராய்ச்சி நிறுவனமான மீடியா பார்ட்னர்ஸ் ஏசியாவின் தரவு வெளிப்படுத்தியது. ஒப்பிடுகையில், போட்டியாளர்களான நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ தலா 5% பெற்றுள்ளன. இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஸ்ட்ரீமிங் சந்தையில் அதன் இருப்பை மாற்றியமைத்து விரிவாக்க டிஸ்னியின் முயற்சிகளை இது எடுத்துக்காட்டுகிறது.

Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!

Follow Us:
Download App:
  • android
  • ios