6 லட்சம் ட்விட்டர் பக்கங்கள் அதிரடி முடக்கம்....
6 லட்சம் ட்விட்டர் பக்கங்கள் அதிரடி முடக்கம்
தீவிரவாதம் அதிகரித்து வருவதால் அதனுடன் தொடர்புடையதாக கருதப்படும் சமூக வலைத்தளங்களை அதிகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதில், பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் மட்டும், கடந்த ஒன்றரை ஆண்டுக்கால கண்காணிப்பில் இதுவரை சுமார் 6 லட்சம் பக்கங்களை முடக்கி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது, பல தீவிரவாத கும்பல், சில விரோத பிரச்சாரங்களை மக்களிடேயே பரப்ப சில சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருவதாக வந்த தகவலை அடுத்து, சந்தேகப்படும் நபர்களை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது .
இதன் காரணமாக தீவிரவாதம் தொடர்புடைய 6 லட்சத்து 36,248 பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன என்றும் , ஐஎஸ் தொடர்புடைய 1 லட்சத்து 25,000 ட்விட்டர் பக்கங்களும், முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த தகவலை அமெரிக்காவின் சிநெட் இணையதளம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .