5G Available Cities : நாடு முழுவதும் 50 இடங்களில் 5ஜி சேவை!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் தங்கள் 5ஜி இணைப்பை வேகமாகப் பரப்பி வருகின்றன. 

5G service available in 50 Indian cities and towns: check full list here

இந்தியாவில் அக்டோபர் 1 ஆம் தேதி 5G சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இருந்து இருந்து, ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 50 நகரங்களில் (டிசம்பர் 7 வரை) தங்கள் 5G கவரேஜை விரிவுபடுத்தியுள்ளனர், மேலும் ஒவ்வொரு நாளும் 5ஜி சேவை இடங்களை விரிவுபடுத்தி வருகின்றனர்.

மேலும், சமீபத்திய நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் 5ஜி சேவை குறி்து பேசப்பட்டது. அப்போது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இரண்டு மாதங்களுக்குள் 50 இந்திய நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவர் கூறுகையில்,  "01.10.2022 முதல் இந்தியாவில் 5G சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது, மேலும் 26.11.2022 நிலவரப்படி, 50 நகரங்களில் 5G சேவைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன" என்று கூறினார்.

5ஜி மீதான கட்டணங்களைப் பற்றித் தெரிவித்த அஷ்வினி, தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் கூடுதல் கட்டணமின்றி 5ஜி இணைப்பை வழங்குவதாக பதிலளித்தார். 

‘இந்த இடங்களில் 5ஜி டவர் வைக்க வேண்டாம்’ Airtel, Jio நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனம் அட்வைஸ்

5G கிடைக்கக்கூடிய நகரங்களின் பட்டியல் இதோ-

ஏர்டெல் 5ஜி தற்போது 12 இந்திய நகரங்களில் கிடைக்கிறது. அவை:டெல்லி, சிலிகுரி, பெங்களூரு, ஹைதராபாத், வாரணாசி, மும்பை, நாக்பூர், சென்னை, குருகிராம், பானிபட், கவுகாத்தி, பாட்னா

விமான நிலையங்களில் ஏர்டெல் 5ஜி: 

பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், புனேவில் உள்ள லோஹேகான் விமான நிலையம், வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம், நாக்பூரில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையம் மற்றும் பாட்னாவில் உள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களிலும் Airtel 5G Plus கிடைக்கிறது.

ஜியோ 5ஜி உள்ள நகரங்களின் பட்டியல்

டெல்லி என்சிஆர், மும்பை, வாரணாசி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, நாதத்வாரா, புனே, குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத், மற்றும் குஜராத்தின் அனைத்து 33 மாவட்ட தலைமையகங்களிலும் 5ஜி கிடைக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios