Asianet News TamilAsianet News Tamil

அறிமுகமானது 5 G….!!   இனி இன்னும்  அதிவேக இன்டர்நெட் சேவை பெறலாம் ....!!!

5g internet
Author
First Published Feb 10, 2017, 6:59 PM IST


4 G சேவை  :

அதி நவீன தொழில்நுட்ப வசதிக்கேற்ப , விரைவாக  செயல்படும் இன்டர்நெட்  சேவை 4 G சேவை . தற்போது அனைவராலும்  அதிகளவில் 4 G சேவையை பயன் படுத்தப்பட்டு வருகிறது.

இந்த  சேவை  மூலம், நொடிக்கு  நொடி  உலக  நடப்புகள்  முதல், நமக்கு தேவையான  அனைத்து வசதியையும் மிக சுலபமாக பெற முடிகிறது.

மேலும்  வீடியோ  டவுன்  லோட்  செய்வது உள்ளிட்ட  அனைத்து விதமான    தேவையையும் ,  அதி  வேகத்தில்  பெற  முடிகிறது.

இந்நிலையில் தற்போது 5 G சேவை   அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான  சின்னத்தையும்  வெளியிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டிற்கு பின் பயன்பாட்திற்கு  வரும் என  எதிர்பார்ப்பு. 

 

5G என அழைக்கப்படும் இந்த சேவை, 4G எல்டிஇ பிரான்டிங்கிற்கு அடுத்த தலைமுறை அப்கிரேடு போன்று இருக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது. 

5G  சேவை   நடைமுறைக்கு வந்தால்,  மக்களிடையே நல்ல வரவேற்பு  இருக்கும்.  அதே  வேளையில் இதற்கான  எதிர்பார்ப்பும்  தற்போது அதிகமாகி உள்ளது.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டிற்கு பின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3GPP செல்லுலார் ஸ்டான்டர்ட்ஸ் குழு:

வயர்லெஸ் கனெக்டிவிட்டிக்கான அடுத்த அத்தியாயத்தினை 3GPP செல்லுலார் ஸ்டான்டர்ட்ஸ் குழு உருவாக்கி  உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குழுவில் ஜப்பான், தென் கொரியா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அமைப்புகள் இடம் பெற்றுள்ளன என்பது கூடுதல் தகவல்..

Follow Us:
Download App:
  • android
  • ios