23 ஆம் தேதி முதல் "சூப்பர் மேரியோ".....இனி எப்பொழுதும் உங்கள் கையில் ஸ்மார்ட் போன் தான்...
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒன்றல்ல இரண்டல்ல ஒட்டுமொத்த துறையிலும் விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது .
அதற்கு எடுத்துக்காட்டாக பல துறைகள் இருந்தாலும், தற்போது வீடியோ கேம்ஸ் எந்த அளவிற்கு மக்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது என்பதற்கு சான்று நாள்தோறும் அறிமுகமாகும் வீடியோ கேம்ஸ் தான் .
அதன்படி, வரும் 23 ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் சூப்பர் வீடியோ கேம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது .
இதற்கு முன்னதாக வீடியோ கேம்ஸ் வரலாற்றில் ‘சூப்பர் மேரியோ கேம்’ என்றாலே தனி சிறப்பு தான் .
இதனை தாண்டி தற்போது பல வீடியோ கேம்ஸ் இருந்தாலும்,வீடியோ கேம்ஸ் பிரியர்களின் ஆழ்மனதில் இருக்கும் சூப்பர் மேரியோ கேமை, புதுமையாக ஸ்மார்ட் போன்களில் விளையாட வழிவகை செய்யப்பட்டுள்ளது .
அமெரிக்காவின் நிண்டெண்டோ என்ற நிறுவனம், கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக தான் ஆப்பிள் போன்களுக்கான ஐ.ஓ.எஸ் இயங்குதளத்தில் இயங்கும் வகையில் இந்த கேமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஆண்ட்ராய்டு இயங்கு தளம் கொண்டுள்ள ஸ்மார்ட் போன்களில் விளையாடும் வகையில் தற்போது சூப்பர் மேரியோ விளையாட்டில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது .
இந்த விளையாட்டை இலவசமாக டவுன் லோட் செய்து கொள்ள முடியும் . ஆனால் விளையாட்டின் அடுத்த பகுதிக்கு செல்லும் போது கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போது சூப்பர் மேரியோ மக்களின் மனதில் மீண்டும் ஒரு தனி இடம் பிடித்துள்ளது என்றே கூறலாம் .