Asianet News TamilAsianet News Tamil

ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டருக்கு சவால் விடும் டி.வி.எஸ். ஸ்கூட்டர்.... ரேன்ஜ், விலை எல்லாமே பயங்கரமா இருக்கே..!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு புது அம்சங்கள் மற்றும் நீண்ட ரேன்ஜ் வழங்கும் பெரிய பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

 

2022 TVS iQube vs Ola S1 Pro Specs, Price and features comparision
Author
India, First Published May 22, 2022, 3:51 PM IST

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் சமீபத்தில் 2022 ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புது அப்டேட் மூலம் இந்த ஸ்கூட்டர் மாடலில் பல்வேறு புது அம்சங்கள் மற்றும் நீண்ட ரேன்ஜ் வழங்கும் பெரிய பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐகியூப் மாடல் நேரடியாக ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. 

அம்சங்கள்:

புதிய டி.வி.எஸ். ஐகியூப் மாடலின் S வேரியண்டில் 5 இன்ச் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ST வேரியண்டில் 7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இரண்டு வேரியண்ட்களிலும் முறையே 32 லிட்டர் மற்றும் 17 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஐகியூப் மாடலின் S மற்றும் ST வேரியண்ட்களிலும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ரியர் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. 

2022 TVS iQube vs Ola S1 Pro Specs, Price and features comparision

புதிய டி.வி.எஸ். ஐகியூப் மாடலில் ஆண்டி தெஃப்ட் அலர்ட், கிராஷ் அலர்ட், லைவ் வெஹிகில் டிராக்கிங், சர்வீஸ் அலர்ட், கால் / மெசேஜ் அலர்ட்கள், நேவிகேஷன் அசிஸ்ட், லாஸ்ட் பார்க்டு லொகேஷன், கார்பன் ஃபூட்-ப்ரிண்ட் டிராக்கர் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் அமேசான் அலெக்சா சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஓலா S1 ப்ரோ மாடலில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், 7 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, நேவிகேஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆக்டா கோர் பிராசஸர், 3GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வைபை, ப்ளூடூத் மற்றும் 4ஜி கனெக்டிவிட்டி உள்ளது. S1 ப்ரோ மாடலில் குரூயிஸ் கண்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்ட் மற்றும் ஹில் ஹோல்டு கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

ரேன்ஜ்:

டி.வி.எஸ். ஐகியூப் மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 145 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. ஓலா S1 ப்ரோ மாடல் முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும். இரு மாடல்களிலும் முறையே 5.1 கிலோவாட் ஹவர் மற்றும் 3.97 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது.

2022 TVS iQube vs Ola S1 Pro Specs, Price and features comparision

விலை விவரங்கள்:

டி.வி.எஸ். ஐகியூப் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 98 ஆயிரத்து 564 (ஆன்-ரோடு, டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐகியூப் S வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 08 ஆயிரத்து 690 (ஆன்-ரோடு, டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் ST வேரியண்ட் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை தற்போது ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என மாறி இருக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios