2022 சிட்டி eHEV ப்ரோடக்‌ஷன்... சூப்பர் தகவல் வெளியிட்ட ஹோண்டா..!

புது ஹைப்ரிட் மாடல் உற்பத்தி பற்றி ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அசத்தல் அப்டேட் கொடுத்திருக்கிறது.

2022 Honda City eHEV Production Commence Launch Soon

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதுவரவு மாடலான ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் உற்பத்தியை துவங்கியதாக அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவலை ஹோண்டா கார் இந்தியா தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளது. 

உற்பத்தி அப்டேட்:

20222 ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலுக்கான உற்பத்தி பணிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தபுகாரா உற்பத்தி ஆலையில் நடைபெற்று வருகிறது. புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலை ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் விலை ரூ. 20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

புதிய ஹோண்டா சிட்டி eHEV மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. புதிய ஹோண்டா காருக்கான முன்பதிவுகள் நாடு முழுக்க இயங்கி வரும் ஹோண்டா அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் மற்றும் ஹோண்டா கார் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது. விற்பனை மையங்களில் முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என்றும் ஆன்லைனில் ரூ. 5 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

2022 Honda City eHEV Production Commence Launch Soon

ஹோண்டா சிட்டி eHEV:

புதிய ஹோண்டா ஹைப்ரிட் கார் மாடலில் புளூ லைன் ஹோண்டா லோகோ, புதிய ஃபாக் லைட் கார்னிஷ், பின்புறத்தில் eHEV சின்னம் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் பூட் லிப் ஸ்பாயிலர், புதிய ரியர் பம்ப்பர் டிப்யூசர் டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. இதன் உள்புறம் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட்  சிஸ்டம், டூயல் டோன் ஐவரி மற்றும் பிளாக் நிற ஸ்கீம், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மற்றும் ஹோண்டா சென்சிங் சூட் மற்றும் ஆக்டிவ் சேப்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

என்ஜின் விவரங்கள்:

ஹோண்டா சிட்டி eHEV மாடலில் 1.5 லிட்டர், அட்கின்சன் சைக்கிள் iVTEC பெட்ரோல் என்ஜின் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இவை இணைந்து 124 பி.ஹெச்.பி. திறன், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் லிட்டருக்கு 26.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

ஹோண்டா eHEV எலெக்ட்ரிக் மோட்டார்கள் லித்தியம் அயன் பேட்டரியை ஒவ்வொரு முறை பிரேக் போடும் போதும் சார்ஜ் செய்கின்றன. பேடில் ஷிஃப்டர்கள் உதவியுடன் பிரேக் எனர்ஜி மீட்பு சிஸ்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். லித்தியம் அயன் பேட்டரி மீது ஹோண்டா நிறுவனம் எட்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்குகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios