2023ஆம் ஆண்டில் பயனர்களால் அதிகமாக டெலிட் செய்யப்பட்ட 2 மொபைல் ஆப்ஸ்!

TRG டேட்டாசென்டர்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு பயனர்களின் அதிருப்தியை பெற்ற மொபைல் அப்ளிகேஷன்களைக் கண்டறிய திட்டமிட்டது. 

2 apps that smartphone users in the world reportedly wanted to delete in 2023 sgb

உலகளவில் 4.8 பில்லியன் சமூக ஊடக பயனர்கள் உள்ளனர். இது உலக மக்கள்தொகையில் 59.9%. இது ஒட்டுமொத்த இணைய பயனர்களில் 92.7% ஐ பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 6.7 வெவ்வேறு நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துகிறார்கள். சமூக வலைத்தளங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 2 மணிநேரம் 24 நிமிடங்கள் செலவிடுகிறார்கள்.

இந்நிலையில், ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 'த்ரெட்ஸ்' என்ற செயலியை ஜூலை 2023 இல் அறிமுகப்படுத்தியது. ஏற்கெனவே இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கை தன்வசம் வைத்திருக்கும் மெட்டா, 'த்ரெட்ஸ்' செயலியை ட்விட்டருக்குப் போட்டியாகக் கொண்டுவந்தது.

ஒரு ஆதார் கார்டு மூலம் எத்தனை சிம் கார்டு வாங்கலாம்? மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

'த்ரெட்ஸ்' வெளியான ஐந்து நாட்களில், 10 கோடி பயனர்களைப் பெற்று சாதனை படைத்தது. இருப்பினும், ஆகஸ்ட் மாதத்திற்குள், தினசரி செயயை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை 80% வீழ்ச்சி அடைந்தது. பயனர்கள் 'த்ரெட்ஸ்' செயலியை பயன்படும் நேரமும் குறைந்துவிட்டதாகத் தகவல் வெளியானது. ஜூலை மாதத்தில் பயனர்கள் தினமும் சராசரியாக 21 நிமிடங்கள் பயன்படுத்திய நிலையில், நவம்பர் மாதம் வெறும் மூன்று நிமிடங்களாகக் குறைந்தது.

2 apps that smartphone users in the world reportedly wanted to delete in 2023 sgb

இந்தப் பின்னணியில், TRG டேட்டாசென்டர்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு பயனர்களின் அதிருப்தியை பெற்ற மொபைல் அப்ளிகேஷன்களைக் கண்டறிய திட்டமிட்டது. உலகளவில் மிகவும் பிரபலமான 9 சமூக வலைத்தளங்களைத் தேர்வு செய்து இந்த ஆய்வைத் தொடங்கியது. கடந்த 12 மாதங்களில் கணக்கை நீக்குவது எப்படி என்று தேடிய பயனர்களின் எண்ணிக்கையை ஆராய்த்தது. சராசரியாக ஒரு மாதத்திற்கு எத்தனை முறை தேடப்பட்டது என்பதை பகுப்பாய்வு செய்ததாக அது கூறியது.

அதன்படி, அதிக பயனர்கள் இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்கை நீக்க விரும்பியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள் 'எனது இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்குவது எப்படி' என்று தேடியுள்ளனர் என்று TRG நிறுவனம் கூறியுள்ளது. இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் 200 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது. இருப்பினும் ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் பேர் கணக்குகளை நீக்கினார்கள் என்றால், ஒரு வருடத்தில் பெரிய வீழ்ச்சியை அடையும் என்றும் TRG அறிக்கை கூறுகிறது.

இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து ஸ்டாப்சாட் (Snapchat) பயனர்களின் அதிருப்தியைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு மாதம்தோறும் கிட்டத்தட்ட 130,000 பேர் தங்கள் ஸ்னாப்சாட் கணக்கை நீக்க முயன்றுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்ஸ்டாகிராமை விட கணிசமாக குறைவாக இருந்தாலும், அதன் மொத்த பயனர் எண்ணிக்கையில் (7.5 கோடி) இது பெரும் பகுதியாகும்.

பெண்களை மிரட்டி பாலியல் செயலில் ஈடுபடுத்தினோம்... ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த ஆபாசப்பட நிறுவனம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios