கருப்பு பணத்தை வெள்ளையாக்க 1 லட்சம் ஐ போன் வாங்கியது அம்பலம்....!!!
கருப்பு பணத்தை வெள்ளையாக்க 1 லட்சம் ஐ போன் வாங்கியது அம்பலம்....!!!
கருப்பு பணத்தில் வாங்கிய ஐபோன்....!!!
செல்லாத 500,1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்வதற்கு கூட பல கெடுபிடி இருப்பதால், வீட்டில் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணத்தில் , விலை மதிப்பு அதிகம் உள்ள பொருளை வாங்குவதில் கவனம் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பழைய 500,1000 நோட்டுகள் செல்லது என அறிவித்த அடுத்த மூன்று நாட்களிலேயே இந்தியாவில் மட்டும் ஆப்பிள் நிறுவனத்தின் 1 லட்சம் ஐபோன்கள் விற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ போனை பொறுத்தவரை, ,ஐபோன் 7 ரூ.60,000-க்கும், ஐபோன் 7 பிளஸ் ரூ.92,000-க்கும் விற்பனை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது இந்திய ரூபாயில் 600 கோடி ரூபாய் அளவுக்கு,( குறைந்த பட்சம் ) மூன்றே நாளில் ஐ போன் விற்பனை யாகியுள்ளது.
அதாவது, பில்லில், முன்தேதியிட்டு ஐ போன் விற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் விளைவாக, ஏற்கனேவே ஐ போன் வாங்க பதிவு செய்திருந்த வாடிகையாளர்களுக்கு கூட ஐ போன் கிடைக்கவில்லையாம்.....
இதனால், ஐ போனுக்கு தட்டுபாடு நிலவுவதால், முழு வீச்சில் ஐ போன் தயாரிப்பு நடைபெற்று வருவதாக வெளியாகி உள்ளது.....
சிம்பள்லா சொல்லணும்னா, கருப்பு பணத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி, தங்கம் வெள்ளி, கார், ஐ போன் என விலை உயர்ந்த பொருட்களாக மாறி உள்ளது என கூறலாம்......