கூகுள் மேப் லொகேஷனை நண்பர்களுடன் ஷேர் செய்வது எப்படி?
தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட நேரத்திற்கு லொகேஷன் ஷேர் செய்யும் ஆப்ஷனும் இருக்கிறது. காலவரையின்றி லொகேஷனைப் பகிரும் அம்சமும் இருக்கிறது.
சமீபத்திய அப்டேட்டில், கூகுள் மேப் இருப்பிடப் பகிர்வு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. லைவ் லொகேஷன் ஷேரிங் எனப்படும் இந்த அம்சம் பயனர்கள் தங்கள் சந்திப்புகளை ஒருங்கிணைக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவும். இது அவர்கள் இருக்கும் இடத்தைப் பகிர்ந்துகொள்ளும் வசதியை வழங்குகிறது.
வாட்ஸ்அப்பில் மிகவும் பிரபலமான இந்த அம்சம் கூகுள் மேப்பிலும் உள்ளது. இதன் மூலம் வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு லொகேஷன் ஷேரிங் மூலம் வழிகாட்டலாம். பிக்-அப் அல்லது டிராப் செய்வதற்கும், கூரியர் பணியாளர்களுக்கும் கூட இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
இந்த 7 மெசேஜ் வந்தால் உஷாரா இருக்கணும்! தப்பித் தவறி கிளிக் செய்தால் ஆபத்து உறுதி!
கூகுள் லைவ் லொகேஷன் ஷேரிங் அம்சம் மிகவும் எளிமையானது. ஏனெனில் இது நேரடியாக கூகுள் மேப்பை பயன்படுத்துகிறது. இது ஓரளவு நிலையான இன்டர்நெட் இணைப்பு உள்ள அனைத்து மொபைல்களிலும் சீராக இயங்கும். பயன்படுத்த மிகவும் எளிதாகவும் இருக்கும்.
தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட நேரத்திற்கு லொகேஷன் ஷேர் செய்யும் ஆப்ஷனும் இருக்கிறது. உங்கள் மேப்பைப் பகிர விரும்பும் கூகுள் பயனரைத் தேர்வு செய்து லொகேஷன் ஷேரிங் அனுமதி வழங்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு லொகேஷன் ஷேர் செய்யப்படும்.
காலவரையின்றி லொகேஷனைப் பகிரும் அம்சமும் இருக்கிறது. பிறகு எப்போது வேண்டுமானாலும் லொகேஷன் பகிர்வதை நிறுத்தலாம். குறிப்பிட்ட நேரம் நிர்ணயம் செய்திருந்தால், தானாகவே நிறுத்தப்பட்டுவிடும்.
கூகுள் மேப் பயன்படுத்தாத பயனர்களுக்கும் லொகேஷன் ஷேர் செய்யும் வசதி இருக்கிறது. கூகுள் கணக்கு இல்லாத நபருக்கு எஸ்.எம்.எஸ். அல்லது ஈமெயில் மூலம் லொகேஷன் பகிர்வதற்கான லிங்க் அனுப்ப முடியும்.
உங்க மொபைலில் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போகுதா? நீடித்த பேட்டரி லைஃப் கிடைக்க இதை செஞ்சு பாருங்க!