உங்க மொபைலில் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போகுதா? நீடித்த பேட்டரி லைஃப் கிடைக்க இதை செஞ்சு பாருங்க!
இன்றைய வேகமான உலகில், ஸ்மார்ட்போன்கள் தகவல் தொடர்பு, வேலை மற்றும் பொழுதுபோக்கு என பல தேவைகளுக்கு பயன்படுகின்றன. இப்படி பல தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் மொபைல்போன்கள் நீண்ட நேர பேட்டரி லைஃப் உடன் இருக்க என்ன செய்யலாம் என்று சொல்கிறது இத்தொகுப்பு.
Reduce the screen brightness
திரையின் பிரைட்னஸ் அளவைக் குறைப்பது, உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் நீடித்த பேட்டரி ஆயுளை பெற உதவும் சிறந்த வழி.
Auto-Brightness
டிஸ்பிளே பிரைட்னஸ் மூலம் வேகமாக பேட்டரி சார்ஜ் குறைவதைத் தடுக்க மற்றொரு வழியும் இருக்கிறது. சூழலுக்கு ஏற்ப திரையின் பிரகாசத்தை தானாகவே மாற்றி அமைக்கும் ஆட்டோ பிரைட்னஸ் ஆப்ஷனை பயன்படுத்தலாம்.
Reduce the screen off time
மொபைலை பயன்படுத்தாதபோது தானாகவே ஸ்கிரீன் ஆஃப் ஆவதற்கான நேரத்தைக் குறைக்கவும். பயன்படுத்தாத நேரத்தில் டிஸ்ப்ளேவை ஆஃப் செய்து வைப்பது பேட்டரியைச் சேமிக்க உதவுகிறது.
Avoid Vibrations
மொபைல்போனில் ரிங்டோன்களை விட அதிர்வுகள் (Vibrations) அதிக சக்தியைப் பயன்படுத்துகின்றன. எனவே, மொபைலில் வைப்ரேஷனை தவிர்ப்பது பேட்டரி லைஃப் அதிகம் கிடைக்கக் காரணமாக இருக்கும்.
Limit battery usage for apps
அனைத்து அப்ளிகேஷன்களுக்கும் பின்னணியில் இயங்கும் (Backgroud Process) அனுமதி தேவை இல்லை. மேப் போன்ற சில அப்ளிகேஷன்களுக்கு அது தேவைப்படலாம். மற்ற செயலிகள் பின்னணியில் இயக்கும் அனுமதியை வழங்காமல் இருக்காலம். இதுவும் பேட்டரி ஆயுளை அதிகப்படுத்தும்.
Make use of power saver
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பேட்டரியை சேமிப்பதற்காக்கவே Power Saver mode இருக்கும். அதை பயன்படுத்துவதும் மொபைலின் பேட்டரி ஆயுளை நீட்டிக்கும்.
Close unused apps
ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களை பயன்படுத்துவது பேட்டரியில் விரைவாகக் சார்ஜ் இழப்பை ஏற்படுத்தும். அதைத் தவிர்க்க பயன்பாட்டில் இல்லாத செயலியை க்ளோஸ் செய்யவும்.
Sync settings
ஈமெயில் மற்றும் சமூக வலைத்தள செயலிகளில் Sync ஆப்ஷனை தேவையான அளவுக்கு மட்டும் அனுமதிக்கவும். அடிக்கடி sync செய்வதைத் தவிர்த்தால் பேட்டரி சார்ஜை சேமிக்கலாம்.
Use Dark Mode / Night Mode
பிரகாசமான திரைகளுக்கு மாற்றாக டார்க்கான திரையை பயன்படுத்துவதும் பேட்டரியில் அதிக நேரம் சார்ஜ் இருப்பதற்கான ஒரு வழி ஆகும். டார்க் மோட் அல்லது நைட் மோட் அப்ஷனில் மொபைல் பயன்படுத்தி பேட்டரியின் உழைப்பை அதிகரிக்கச் செய்யலாம்.
Refresh Rate
இப்போது வரும் புதிய ஸ்மார்ட்போன்கள் 165Hz புதுப்பிப்பு வீதம் (Refresh rate) கொண்ட டிஸ்ப்ளேவுடன் வருகின்றன. இந்த ரெஃப்ரெஷ் ரேட்டை 60Hz வரைக் கட்டுப்படுத்தும் ஆப்ஷனும் அவற்றில் இருக்கும். அப்படிச் செய்தால் டிஸ்பிளே குறைந்த அளவு சார்ஜை பயன்படுத்தும். சில ஃபோன்கள் LTPO தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும். அந்த மொபைல்களில் ரெஃப்ரெஷ் ரேட்டை 1Hz வரை குறைத்து பேட்டரியை சேமிக்கலாம்.