Tech Tips: ஸ்மார்ட்போன் ஸ்கிரீனை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?

ஃபோன் திரையை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தவறாமல் சுத்தம் செய்வது நல்லது. சுத்தம் செய்யம்போது செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன என்று பார்க்கலாம்.

Cleaning your smartphone screen: What to do and not to do sgb

ஸ்மார்ட்ஃபோன்கள் அன்றாடம் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. எனவே மொபைல் போன் திரையை அழுக்கு, தூசி, கறைகள் இல்லாமல் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டி இருக்கிறது. சுத்தமான திரை தெளிவான காட்சியை வழங்க உதவும்.  இந்நிலையில், மொபைல் பயனர்கள் திரையை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்களைப் பார்க்காலம்.

* மைக்ரோஃபைபர் துணி: மைக்ரோஃபைபர் துணியை பயன்படுத்தி திரையைச் சுத்தம் செய்வதால், கீறல் விழாமல் கைரேகைகளை சிறப்பாகத் துடைக்கலாம்.

* காய்ச்சி வடிகட்டிய நீர்: ஸ்கிரீனில் விழும் கோடுகளைத் தவிர்க்க, காய்ச்சி தண்ணீரைக் குறைவாகப் பயன்படுத்தித் சுத்தம் செய்யலாம்.

* ஐசோபிரைல் ஆல்கஹால் (70%): கடுமையான அழுக்கு அல்லது கிருமிநாசினிக்கு, 70% ஐசோபிரைல் ஆல்கஹால் கரைசலை குறைவாகப் பயன்படுத்தலாம். ஒருபோதும் அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.

மொபைல் ஸ்டோரேஜ் நிரம்பி வழியுதா? வாட்ஸ்அப் செட்டிங்ஸை கொஞ்சம் மாற்றிப் பாருங்க!

Cleaning your smartphone screen: What to do and not to do sgb

* ரசாயனங்களைத் தவிர்க்கவும்: ப்ளீச் மற்றும் பிற கடுமையான ரசாயனங்களை பயன்படுத்தி சுத்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற ரசாயனங்களைப் பயன்படுத்தினால், ஸ்கிரின் பாதிப்பு ஏற்பட்டு வாரண்டியைக்கூட பாதிக்கலாம்.

* எப்பொழுதும் மொபைலை சுத்தம் செய்வதற்கு முன் ஸ்கிரீனை ஆஃப் செய்துவிட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* தூசி மற்றும் கறைகளை அகற்ற உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியை பயன்படுத்தித் துடைக்க வேண்டும். அதையும் மென்மையாக  பயன்படுத்த வேண்டும். மிகவும் கடினமாக அழுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

* மொபைல் கேஸைக் கழற்றிவிட்டு சுத்தம் செய்ய வேண்டும். மீண்டும் திரையை ஆன் செய்வதற்கு முன் முழுமையாக உலர வைக்க வேண்டும்.

மொபைல் கேமராவில் சூப்பரான போட்டோஸ் எடுக்கலாம்! இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க!

Cleaning your smartphone screen: What to do and not to do sgb

ஃபோன் திரையை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தவறாமல் சுத்தம் செய்வது நல்லது. ஆனால், சுத்தம் செய்யம்போது கட்டாயமாகச் செய்யக்கூடாதவை என்ன என்று பார்க்கலாம்.

* திரையில் நேரடியாக திரவங்களை தெளிக்கவோ அல்லது ஊற்றவோ கூடாது. இது உள்ளே ஊடுருவி சேதத்தை ஏற்படுத்தலாம்.

* ப்ளீச், விண்டோ கிளீனர் அல்லது பாத்திர சோப்பு போன்ற கடுமையான ரசாயனங்களை பயன்படுத்தக் கூடாது.

* பேப்பர் அல்லது டிஷ்யூவை பயன்படுத்த வேண்டாம். அது திரையில் உரசும்போது கீறலை ஏற்படுத்தக்கூடும். மைக்ரோஃபைபர் துணிதான் சிறந்தது.

உங்க மொபைலில் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போகுதா? நீடித்த பேட்டரி லைஃப் கிடைக்க இதை செஞ்சு பாருங்க!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios