மொபைல் கேமராவில் சூப்பரான போட்டோஸ் எடுக்கலாம்! இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க!
உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சில அழகான தருணங்களைப் படம்பிடிக்க உங்களிடம் உள்ள ஸ்மார்ட்போன் கேமராவே போதும். மொபைல் கேமராவை வைத்தே அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க சில பயனுள்ள டிபஸ் இதோ...
Prepare your smartphone
லென்ஸ்களை சுத்தம் செய்து, பேட்டரியில் சார்ஜ் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். மோஷன் டிராக்கிங், HDR மோட் மற்றும் கிரிட் லைன்கள் போன்ற அம்சங்களை பயன்படுத்தலாம்.
உங்கள் புகைப்படங்களுக்குப் பொருத்தமான ஃபிரேமை அமைத்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களில் உள்ளவற்றையும் சேர்த்து ஃப்ரேமிங் செய்து போட்டோ எடுக்கலாம்.
ஃபிளாஷ் பயன்படுத்தாமல் படம் பிடிக்க வேண்டும். நைட் மோட் ஆப்ஷனை பயன்படுத்தி குறைந்த ஒளியில் படங்களை எடுக்கலாம்.
நெருக்கமான காட்சிகளைப் படம் பிடிக்க சுற்றுப்புறங்களில் உள்ள பெரிய பொருட்களை அகற்றி, ஆப்டிகல் டெலிஃபோட்டோ லென்ஸ் வரம்புகளுக்குள் இருந்து கிளிக் செய்வும். போட்டவின் தரம் சிறப்பாக இருக்க ஜூம் செய்வதைத் தவிர்க்கவும்.
குறைந்த ஒளியில், ஷேக் ஆகாமல் போட்டோ எடுக்கவேண்டும் என்றால் ட்ரைபாட் ஒன்றை பயன்படுத்தலாம். ஷட்டர் வேகம் மெதுவாக வைத்து கேமரா அசைவையும் தவிர்க்கலாம்.
மொபைலில் கொடுக்கப்பட்டுள்ள போட்டோ ஃபில்டர்களை பயன்படுத்திப் பார்க்கலாம். அல்லது போட்டோவைக் கிளிக் செய்த பின்பும் ஃபில்டர்களை பயன்படுத்தி புகைப்படங்களை அழகாக்கலாம்.
ஷட்டர் வேகம் (Shutter speed), ஐஎஸ்ஓ (ISO), ஃபோகஸ் (Focus) போன்ற அம்சங்களைக் கட்டுப்படுத்த ப்ரோ மோட் மூலம் புகைப்படங்களை எடுத்துப் பார்க்கவும்.
ஷட்டர் வேகத்தை சரிசெய்வதன் மூலம் வேகமான நகர்வுகளை அழகாகப் பதிவுசெய்யலாம். சற்றே மெதுவான ஷட்டர் வேகம், புகைப்படங்களை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றும்.
பிரத்யேகமான ப்ரோ மோட் இல்லை என்றால், ஷட்டர் வேகத்தை அதிகரிக்க ஸ்போர்ட்ஸ் அல்லது ஆக்ஷன் மோட் பயன்படுத்தலாம்.
செல்ஃபி எடுக்க கையை நன்கு உயர்த்தி கிளிக் செய்யவும். பரந்த கண்ணோட்டத்திற்கு வைட்-ஆங்கிள் லென்ஸை பயன்படுத்தவும்.
வீடியோக்கள் எடுக்கும் போது ஸ்லோ-மோஷன் அம்சத்தைப் பயன்படுத்திப் பார்க்கலாம். இதன் மூலம் மகிழ்ச்சியான தருணங்களை சுவாரஸ்மானதாகவும் மாற்றலாம்.
ஃபிரேமுக்குள் அலங்கார வண்ண விளக்குகளை இணைத்து கிளிக் செய்து, உங்கள் அழகான தருணங்களை சிறப்பான போட்டோக்களில் பதிவுசெய்யலாம்.