ட்விட்டரில் எமர்ஜென்சியை அறிவித்த எலான் மஸ்க்! இனி தினசரி எக்கச்செக்க கட்டுப்பாடுகள்... முழுவிவரம் இதோ
ட்விட்டரில் பயனர்கள் ஒருநாளில் அதிகபட்சம் 6000 ட்வீட்களை மட்டுமே பார்வையிட முடியும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை தற்காலிகமான அவசர நடவடிக்கை என்று குறிப்பிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதன்படி, இனி ட்விட்டரில் உள்ள பதிவுகளைக் காண கட்டாயம் ஒரு பயனர் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
ட்விட்டரில் கணக்கு இல்லாதபோதும் ட்வீட்களை பார்வையிடும் வசதி இதுவரை இருந்தது. இனி அந்த வசதி ட்விட்டரில் இருக்காது. எந்த ஒரு ட்வீட்டைப் பார்க்க வேண்டும் என்றாலும், நீங்கள் ட்விட்டரில் ஒரு கணக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம். அதாவது ட்விட்டர் கணக்கு தொடங்கவோ அல்லது ஏற்கெனவே உள்ள கணக்கில் லாக் இன் செய்யவோ வேண்டும். அதற்குப் பின்தான் ட்விட்டரில் பதிவுகளைப் பார்க்க முடியும்.
11 லட்சம் கணக்குகளை இந்தியாவில் தூக்கிய ட்விட்டர்.. ஏன் தெரியுமா.?
மேலும், இனிமேல் ஒரு பயனர் கணக்கில் இருந்து தினமும் அதிகபட்சமாக 6000 ட்வீட்களை மட்டுமே பார்க்க முடியும். வெரிஃபைடு டிக் பெற்ற பயனர்கள் தினமும் 6000 ட்வீட்களைப் பார்க்கலாம். டிக் பெறாத கணக்குகளில் தினமும் 600 ட்வீட்களை பார்க்கலாம். புதிதாகக் கணக்கு தொடங்கி டிக் பெறாத பயனர்கள் ஒரு நாளில் 300 ட்வீட்களை மட்டுமே பார்க்க முடியும்.
இதுபற்றி அறிவித்துள்ள எலான் மஸ்க், "சாதாரண பயனர்களுக்கான சேவையை இழிவுபடுத்தும் அளவுக்கு தரவு திருட்டை எதிர்கொண்டு வருகிறோம்!" என்று கூறினார். நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் ட்விட்டர் தரவை கொள்ளை அடிக்கின்றன என்றும் இது ட்விட்டர் பயனர் அனுபவத்தை பாதிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
OpenAI நிறுவனத்தின் தனது சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற செயற்கை நுண்ணறிவு சாட் போட்களில், ட்விட்டர் தரவைப் பயன்படுத்தி மாதிரிகளாகப் பயன்படுத்தி பயிற்றுவிப்பதற்காக ஏற்கெனவே எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
"எங்கள் தரவைத் திருடியவர்களுக்கு எதிராக நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்போம், இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் அவர்களை நீதிமன்றத்தில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்" என எலான் மஸ்க் சொல்லி இருக்கிறார்.
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவுக்கு அனுப்பிய கடிதத்தில், மஸ்க்கின் வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரோ, ட்விட்டரின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதைத் தணிக்கை செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தின் தரவைப் பயன்படுத்துவதில் விண்டோஸ் டெவலப்பர் ஒப்பந்தத்தை மீறியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல அதிரடியான மாற்றங்களைச் செய்துவருகிறார். வருவாயைப் பெருக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ப்ளூ டிக் பெற சந்தா செலுத்தும் முறையைக் கொண்டுவந்தார். விளம்பரத்திற்கு அப்பால் வருவாய் ஈட்ட ட்விட்டர் பிரபலங்களின் குறிப்பிட்ட பதிவுகளைப் படிக்க கட்டணம் செலுத்தும் முறை பற்றிய அறிவிப்பு இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியானது. மேலும், ட்விட்டர் ஏபிஐ (API) பயன்படுத்தப்படுத்தும் டெவலப்பர்களிடம் இருந்து ட்விட்டர் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னை - திருப்பதி இடையே தமிழகத்திற்கு 3வது வந்தே பாரத் ரயில்?