Asianet News TamilAsianet News Tamil

இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் அந்த மாதிரி போஸ்டு எல்லாம் இனிமே வராது!

மெட்டா சமீபத்திய மாதங்களில் டீன் ஏஜ் பயனர்கள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கத்தை ஆய்வு செய்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது கவனிக்கதக்கது.

Instagram And Facebook Plan To Limit Reach Of Harmful Content To Teens sgb
Author
First Published Jan 14, 2024, 7:02 PM IST

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதின்வயதினருக்குத் தீங்கு விளைவிக்கும் பதிவுகள் மற்றும் உணவுக் கோளாறு தொடர்பான பதிவுகளைக் குறைக்க  இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. 18 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் அம்சங்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

பதின்ம வயதினருக்கும் அவர்களின் பெற்றோருக்கும் ஆதரவாக 30க்கும் மேற்பட்ட கருவிகளை மெட்டா நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது, "நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பதின்ம வயதினருக்கான பல வகையான உள்ளடக்கங்களை மறைக்கத் தொடங்குவோம்"  என்று கூறியுள்ளது.

"இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் அனைத்து பதின்ம வயது பயனர்களும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்புக்குள் கொண்டுவரப்படுவார்கள். மேலும் இன்ஸ்டாகிராம் தேடலில் கூடுதல் விதிமுறைகளும் வரவுள்ளன" என்று மெட்டா நிறுவனம் தெரிவிக்கிறது.

112 வயதில் 8வது கல்யாணத்துக்குக் காத்திருக்கும் மலேசிய மூதாட்டி!

Instagram And Facebook Plan To Limit Reach Of Harmful Content To Teens sgb

பதின்வயதினர் இந்த இரண்டு சமூக வலைத்தளங்களையும் பாதுகாப்பான மற்றும் வயதுக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்துவதை உறுதிசெய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, பதின்ம வயதினர் இன்ஸ்டாகிராமில் ஒரே கிளிக்கில் தங்கள் பிரைவசி செட்டிங்கை புதுப்பிக்கவும் அறிவுறுத்தி வருகிறது.

மெட்டா சமீபத்திய மாதங்களில் டீன் ஏஜ் பயனர்கள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கத்தை ஆய்வு செய்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது கவனிக்கதக்கது.

நவம்பரில், முன்னாள் பேஸ்புக் ஊழியரான ஆர்டுரோ பெஜார், மெட்டாவின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட மெட்டாவின் உயர்மட்ட நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இன்ஸ்டாகிராம் போன்ற மெட்டாவின் சமூக வலைத்தளங்களில் பதின்ம வயதினருக்கு தீங்கு விளைவிக்கும் எச்சரிக்கைகளை பல ஆண்டுகளாக புறக்கணித்தனர் என்று தெரிவித்தார்.

இன்ஸ்டாகிராமில் பதின்ம வயதினர் அந்நியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது குறித்தும் பெஜார் கவலைகளை எழுப்பினார். மெட்டா மீதான மற்றொரு வழக்கில் அந்நிறுவனம் 13 வயதுக்கு உட்பட்ட பயனர்களின் கணக்குகளை மூட மறுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் 18+ பதிவுகளைக் கட்டுப்படுத்தும் மாற்றங்கள் வரும் மாதங்களில் இருந்து செயல்பாட்டுக்கு வரவுள்ளன என்று சொல்லப்படுகிறது.

சுமாரான போட்டோவையும் சூப்பராக மாற்றலாம்! இன்ஸ்டாகிராமில் கலர் கலரா புதிய ஃபில்டர்ஸ் அறிமுகம்!

Follow Us:
Download App:
  • android
  • ios