Asianet News TamilAsianet News Tamil

இன்ஸ்டாகிராமில் புதுசா வந்த வானிஷ் மோட்! எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சுகோங்க!

எந்த நபரின் சாட்டில் வானிஷ் மோட் செயல்பட வேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். அந்த சாட்டிற்குச் செற்று ஸ்கிரீனில் கீழே இருந்து ஸ்வைப் அப் (swipe up) செய்ய வேண்டும்.

How to Use Vanish Mode on Instagram: Send messages in vanish mode on Instagram sgb
Author
First Published Mar 28, 2024, 6:20 PM IST

மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் ஸ்னாப்சாட்டில் இருப்பது போன்ற வானிஷ் மோட் என்ற புதிய அம்சம் அறிமுகமாகி இருக்கிறது. இது வாட்ஸ்அப்பில் உள்ள டிஸ்அப்பியரிங் மெசேஜ் (Disappearing Message) போன்ற அம்சம் ஆகும்.

இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த வசதியை பயன்படுத்துவதற்கு செட்டிங்ஸ் பகுதியில் உள்ள வானிஷ் மோட் அம்சத்தை ஆக்டிவேட் செய்ய வேண்டும். வானிஷ் மோட் ஆக்டிவாக இருக்கும்போது அனுப்பும் மெசேஜ், போட்டோ, வீடியோ ஆகிய எல்லாமே மறுபுறம் உள்ள பயனர் ஒரு முறை பார்த்த பின் மறைந்துவிடும்.

ஒரு முறை மெசேஜைப் பார்த்த பிறகு அது உரையாடலில் இருந்து மறைந்துவிடும். இது குரூப் மற்றும் தனிநபர் உரையாடலுக்கும் பொருந்தும் அம்சமாக இருக்கும். ஆனால் இன்ஸ்டாகிராம் கொண்டுவந்துள்ள வானிஷ் மோட் சற்று வித்தியாசமாக இருக்கும்.

புதிய பேமெண்ட் ஆப்ஷனுடன் அசத்தும் வாட்ஸ்அப்! வெளிநாட்டுக்கும் ஈசியா பணம் அனுப்பலாம்!

How to Use Vanish Mode on Instagram: Send messages in vanish mode on Instagram sgb

இன்ஸ்டாவில் குறிப்பிட்ட நபர் அல்லது குழுவை மட்டும் தேர்ந்தெடுத்து அந்த உரையாடலில் மட்டும் வானிஷ் மோட் ஆக்டிவேட் செய்ய முடியும். எனவே எந்த நபரின் சாட்டில் வானிஷ் மோட் செயல்பட வேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். அந்த சாட்டிற்குச் செற்று ஸ்கிரீனில் கீழே இருந்து ஸ்வைப் அப் (swipe up) செய்ய வேண்டும்.

வானிஷ் மோட் ஆக்டிவேட் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்ய 'You turned on Vanish Mode' என்ற தகவல் திரையில் தோன்றும். மீண்டும் ஒரு முறை ஸ்வைப் அப் செய்தால் வானிஷ் மோட் ஆஃப் செய்யப்பட்டுவிடும்.

வானிஷ் மோட் ஆக்டிவேட் செய்தால் அது எதிர்பக்கம் உள்ள பயனர் சாட்டிற்குள் வரும்போது வானிஷ் மோட் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது என தகவல் தோன்றும். வானிஷ் மோட் ஆஃப் செய்தாலும், ஆக்டிவேட் செய்திருந்தபோது அனுப்பிய மெசேஜ்களை மீண்டும் உரையாடலில் தோன்றாது.

கருந்துளை ஆராய்ச்சியில் புதிய மைல்கல்! EHT தொலைநோக்கி பதிவுசெய்த புதிய படங்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios