தான் குளிப்பதை படம் பிடித்து, ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்திய நபரை, ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் வேளாங்கண்ணியில் நடந்துள்ளது.

திருவாரூர் மாட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த விக்ரம் (36) இவர் தொலைக்காட்சி மற்றும், சினிமா கலைஞர்களுக்கு ஆடை தைத்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கும்பகோணத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு விக்ரம் சென்று வருவார்.

அப்போது கும்பகோணம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நீலாவதி (21) உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நீலாவதி குளித்துக் கொண்டிருந்துள்ளார். இதனை விக்ரம் தனது செல்போனில் படம் பிடித்தார்.

நீலாவதி குளித்துக் கொண்டிருப்பதை, அவரிடமே காட்டிய விக்ரம், தனது ஆசைக்கு இணங்கும்படி கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த நீலாவதி விக்ரமின் ஆசைக்கு மறுப்பு தெரிவித்தார்.

ஆனால், விக்ரம் தொடர்ந்து, வற்புறுத்தி வந்துள்ளார். என் ஆசைக்கு இணங்காவிட்டால், இந்த படத்தை அனைவரிடமும் காட்டுவேன் என்று மிரட்டியுள்ளார் விக்ரம். இதனால், செய்வதறியாமல் திகைத்த நீலாவதி, தனது நண்பரான ராகுலிடம் இது குறித்து கூறியுள்ளார்.

இந்த நிலையில், வேளாங்கண்ணிக்கு சென்று வரலாம் என்று விக்ரம், நீலாவதியை அழைத்துள்ளார். இதனை நீலாவதி, தனது நண்பர் ராகுலிடம் கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராகுலை தீர்த்துக்கட்ட நீலாவதியும், ராகுலும் முடிவு செய்துள்ளனர். அதன்படி விக்ரமும் நீலாவதியும் வேளாங்கண்ணிக்கு வந்தனர். அவர்களைப் பின் தொடர்ந்து ராகுல்  வந்துள்ளார். 

வேணாங்கண்ணி கடலில் நீலாவதியும், விக்ரமும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராகுல், தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு விக்ரமின் மார்பில் சரமாரியாக குத்தியுள்ளார். மேலும், கடல் நீரில் விக்ரமை மூழ்கடித்தும் உள்ளனர். இதில் விக்ரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் பெண்ணுக்கு தீங்கிழைப்பதாக கருதிய சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது, நீலாவதியும், ராகுலும் விக்ரமை கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நீலாவதியையும், ராகுலையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட விக்ரமின் உடலை, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.