இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்திய இளைஞரை காவலாளர்கள் கைது செய்து அவரிடமிருந்து 70 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்தனர்.  

இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்திச் செல்வதாக தேவிபட்டினம் மரைன் காவலாளர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது

அந்த தகவலின் பேரில் கடலோர காவல்படை சிறப்பு உதவி ஆய்வாளர் போஸ் தலைமையிலான காவலாளர்கள் நயினார்கோவில் விலக்குச் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஒரு இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்தார். அவரை நிறுத்தி அவரது வாகனத்தை சோதனை செய்தபோது அதில் சுமார் 70 கிலோ எடையுள்ள கடல் அட்டைகளை இருந்தது தெரிந்தது.

அதனைத் தொடர்ந்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த காவலாளர்கள் அவற்றை கொண்டு வந்த தேவிபட்டினத்தைச் சேர்ந்த முகமது பாரூக் மகன் ஜெபின் (29) என்பவரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக ஜெபினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.