"உங்களுக்கு இது அழகா இருக்கு.."..! பெண் செய்தியாளரை வர்ணித்த அமைச்சர் விஜயபாஸ்கர்..!

பெண் ரிப்போர்டர் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்காமல் மாறாக ,உங்களுக்கு இந்த ஸ்பெக்ஸ் அழகாக இருக்கு என வர்ணித்து பேசிய படி அமைச்சர் விஜயபாஸ்கர் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நேற்று அதிமுக அலுவலகத்தில், முக்கிய நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் முடிந்து வெளிவந்த சுகாதாரத்துறை அமைச்சரிடம், பெண் செய்தியாளர் ஒருவர் கூட்டத்தில் என்ன ஆலோசிக்கப்பட்டது  என்பது குறித்த கேள்விகளை எழுப்ப...அவரோ மிகவும் கூலாக நடந்தவாறே..."உங்களுக்கு இந்த ஸ்பெக்ஸ் நல்லா இருக்கு என  சொல்கிறார்....ஒரு முறை தான் சொன்னார் என்று பார்த்தால்,திரும்ப திரும்ப அதனையே மூன்று முறை சொல்கிறார்.....

கடைசி வரை,அந்த பெண் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல்,நீங்க நல்லா இருக்கீங்க நல்லா இருகீங்க என்றவாறே சென்று விடுகிறார்...இதனை பிரபல தனியார் தொலைக்காட்சி படம் பிடித்து ஒளிபரப்பி உள்ளது.

அமைச்சரின் இந்த செய்கைக்கு பெண் ஊடகவியலார் மற்றும் பொது மக்களிடேயே சர்ச்சை கிளம்பி உள்ளது.