காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக  மெரினாவில்  சில இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்

விவேகானந்தர் இல்லம் எதிராக சிலர் ஒன்று கூடி  போராட்ட்த்தில் ஈடுபட்டு  உள்ளனர்

கடற்கரை ஒட்டியுள்ள பகுதியில் நின்றவாறு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என  பதாகைகளை  கையில் ஏந்தியவாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்

இதற்கு முன்னதாக,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மெரினாவில் போராட்டம் நடத்த  இளைஞர்கள் ஒன்று கூட இருப்பதாக தகவல் வெளியானது

அதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர அவசரமாக 250 கும் மேற்பட்ட, போலீசார் மெரீனா கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்

இந்நிலையில், மீண்டும் இன்று காலை, சில மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வந்து சில மணி துளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போராட்டாம் குறித்து விசாரிக்கும் போது, சிபிஎஸ்சி வினாத்தாள் வெளியனா விவகாரம் தொடர்பாக அதற்கு எதிர்ப்பு  தெரிவித்தும், மறு தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது சில இளைஞர்கள்  மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு  உள்ளதால் பரபரப்பு  ஏற்பட்டு  உள்ளது.