அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்ப்பவர் இருசப்பன். இவரது மனைவி டாக்டர் ஜனனி, மனநல மருத்துவர். காதல் திருமணம் செய்த இவர்களுக்கு தனுஷியா என்ற மகள் உள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேனி மருத்துவக்கல்லூரியின் உதவி பேராசிரியராக மாற்றப்பட்டார். விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி, கம்பர் தெருவில் வசித்து வந்த ஜனனி தினமும் இங்கிருந்து தேனிக்கு சென்று வந்தார்.

நேற்றுமாலை பணி முடிந்து வீடு திரும்பிய அவர், மாடி அறையில் ஓய்வு எடுத்தார். இருசப்பன் அவரை சந்தித்து நடைபயிற்சி செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.

அவர் நடைபயிற்சி செய்துவிட்டு திரும்பி வந்த பிறகும் மாடி அறையில் இருந்து ஜனனி வரவில்லை. ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பார் என இருசப்பனும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார். இரவு 9 மணி வரை ஜனனி கீழே வராததால் அவரது அறைக்கு இருசப்பன் சென்றார்.

அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. எத்தனை முறை கதவை தட்டியும்,  செல்போனுக்கு கால் செய்தேன் ஆனால் எடுக்கவில்லை, இதனால் அதிர்ச்சி அடைந்த இருசப்பன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

விருதுநகர், பாண்டியன் நகர் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு மின் விசிறியில் தூக்குப்போட்டு ஜனனி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த சில நாட்களாக டாக்டர் ஜனனி பணிச்சுமை அதிகம் உள்ளதாகவும், வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் கூறி வந்தாராம். அவரது தற்கொலைக்கு இது தான் காரணமாக இருக்குமா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்கொலை செய்த டாக்டர் ஜனனியின் பெற்றோரும் டாக்டர்கள் தான். அவர்கள் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகின்றனர். ஜனனியின் தம்பி அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். நோயாளிக்கு வைத்தியம் பார்க்கும் ஒரு  மனநல மருத்துவரே தற்கொலை முடிவை எடுத்திருப்பது விருதுநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!

மைனர் பெண்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் யுவராஜ். அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பீச், பார்க் என பல இடங்களிலும் சுற்றி வந்துள்ளனர். யுவராஜ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அனுபிரியாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனால், கடந்த 2013ம் ஆண்டு அனுபிரியா கர்ப்பமாக்கியுள்ளார்.  இதையடுத்து அனுபிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபோது யுவராஜ் மறுத்துள்ளார்.

மேலும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து அனுப்பிரியா குடும்பத்தினர் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் யுவராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.