தஞ்சாவூர்,
ரூ.75 இலட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டி 8.65 சதவீதமாக குறைந்துள்ளது என பாரத ஸ்டேட் வங்கியின் தஞ்சை மண்டல மேலாளர் கணேசன் கூறினார்.
பாரத ஸ்டேட் வங்கியின் தஞ்சை மண்டல மேலாளர் கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், “புத்தாண்டில் பாரத ஸ்டேட் வங்கி கடன்களுக்கான வட்டியை 0.9 சதவீதம் குறைத்துள்ளது. இதன் மூலம் ரூ.75 இலட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டி 8.65 சதவீதமாக குறைந்துள்ளது.
ரூ.12 இலட்சம் மற்றும் ரூ.9 இலட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு முறையே மூன்று மற்றும் நான்கு சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
மேலும், எங்களது வங்கியில் ஊதிய கணக்கு வைத்துள்ள மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு, வாகன விலையில் 100 சதவீதம் வாகன கடன் வழங்கப்படுகிறது.
விவசாயிகளின் நாள்பட்ட வாராக்கடனை அசல் வட்டி தள்ளுபடியுடன் ஒருமுறையில் செலுத்தி முடிக்க சிறப்பு திட்டம் அமலில் உள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக்கடன் பெற்று படித்து முடித்த வேலையில்லா இளைஞர்கள் வட்டி சலுகையுடன் கல்விக்கடனை செலுத்தி முடிக்க வருகிற 7-ஆம் தேதி அனைத்து வங்கி கிளைகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
மேலும், பணம் இல்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பாரத ஸ்டேட் வங்கி இணையவங்கி சேவை, கைப்பேசி வங்கி சேவை, கைப்பேசி பணப்பை சேவை போன்ற சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
தொழில், வியாபாரம், சேவை செய்பவர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ரூ.6 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கடன், இந்த மாதத்திலும், அடுத்த மாதத்திலும் (பிப்ரவரி) அதிக அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:55 AM IST