Asianet News TamilAsianet News Tamil

தொடர்ந்து 150 மணி நேரம் யோகா செய்யும் பெண் – முந்தை கின்னஸ் சாதனையை முறியடிக்க முடிவு…

Yoga doing woman for 150 hours continuously - decided to break Guinness record
Yoga doing woman for 150 hours continuously - decided to break Guinness record
Author
First Published Nov 10, 2017, 7:56 AM IST


காஞ்சிபுரம்

தொடர்ந்து 150 மணிநேரம் யோகா செய்து தனது முந்தைய கின்னஸ் சாதனையை முறியடிக்க்கும் முயற்சியில் காஞ்சிபுரத்தில் பெண் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மகா மகரிஷி அறக்கட்டளை ஒன்று உள்ளது. இதில், பயிற்சி பெற்றவர் ரஞ்சனா. இவர் யோகாசன ஆசிரியராகவும் உள்ளார். 

இவர், கடந்தாண்டு 57 மணிநேரம் தொடர் யோகாசனம் செய்து சாதனை படைத்தார். இதனை முறியடிக்கும் வகையில், தற்போது கின்னஸ் சாதனை மேற்கொள்ள முயற்சித்து இருக்கிறார்.

அதன்படி, தொடர்ந்து 150 மணி நேரம், அதாவது 6 நாள்களுக்கும் மேலாக யோகாசனம் செய்து தனது சாதனையை தானே முறியடிக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சி, சின்ன காஞ்சிபுரம் பங்காரு ஏசப்பன் தெருவில் உள்ள மகாயோக தியான மைய வளாகத்தில் நேற்றுத் தொடங்கியது.

இந்த கின்னஸ் முயற்சியில், அவர் நூற்றுக்கணக்கான யோகாசனங்கள் செய்வதற்கு திட்டமிட்டு, சாதனை நிகழ்த்தப் போவதாகத் தெரிவித்துள்ளார். அந்த வகையில், தொடர்ந்து 150 மணி நேரம் யோகாசனம் செய்யும் பட்சத்தில் இந்தச் சாதனை உலக அளவிலான கின்னஸ் சாதனையாக அமையும்.

இதனை சிறுவர்கள், பெரியவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வமுடன் நேரில் வந்து பார்த்துவிட்டு ரஞ்சனாவுக்கு வாழ்த்தகளைத் தெரிவித்து செல்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios