சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று உயிரிழந்தார். 73 வயதான அவர் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

புதுச்சேரியில் 1945-ம் ஆண்டு பிறந்த பிரபஞ்சன் பத்திரிகைகள் மூலம் தனது எழுத்துப்பணியை தொடங்கினார். வானம் வசப்படும் என்ற வரலாற்று புதினத்துக்கு இவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. குறிப்பாக இவர் எழுதிய வானம் வசப்படும் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். இவர் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது  பெற்றவர். இதே போல தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதையும் பெற்றுள்ளார். மேலும் பல விருதுகளை பெற்றுள்ளார். 

இவர் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 மாத காலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதில் அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் கடந்த மாதம் 15ம் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மதகடிப்பட்டில் உள்ள அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.