World Press Photo Award: முதல்முறையாக தென்னிந்தியர் தேர்வு.. சர்வதேச விருது பெற்ற மதுரைக்காரர்..
World Press Photo அமைப்பின் ’புகைப்பட கலைஞர்’ சர்வதேச விருதுக்கு மதுரையை சேர்ந்த புகைப்பட கலைஞர் செந்தில் குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பத்திரிக்கை புகைப்பட கலைஞருக்கான சர்வதேச விருதை பெறும் முதல் தென்னிந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
World Press Photo அமைப்பின் ’புகைப்பட கலைஞர்’ சர்வதேச விருதுக்கு மதுரையை சேர்ந்த புகைப்பட கலைஞர் செந்தில் குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பத்திரிக்கை புகைப்பட கலைஞருக்கான சர்வதேச விருதை பெறும் முதல் தென்னிந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
உலகப்புகழ் பெற்ற World Press Photo Awards விருதை மதுரையைச் சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் செந்தில் குமரன் வென்றுள்ளார். இந்தியாவில் இருந்து இதுவரை நான்கு பேர் மட்டுமே வென்றிருக்கும் இந்த விருதை புலிகளுக்கும், மனிதனுக்குமான வாழ்வியல் குறித்த புகைப்படத்திற்காக செந்தில் குமரன் வென்றிருக்கிறார்.
உலக அளவில் 130 நாடுகளில் இருந்து 4,066 புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற நிலையில் விருதுக்கான தேர்வு பட்டியலில் 23 நாடுகளை சேர்ந்த 24 புகைப்பட கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், இவர் World Press Photo Awards விருதிற்கு ஆசியக் கண்டத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டார். ஆசிய கண்ட அளவில் இந்த சர்வதேச விருதை தென்னிந்தியர் ஒருவர் பெறுவது இதுவே முதல் முறையாகும். வெற்றி பெற்ற செந்தில் குமரனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
2001 ஆம் ஆண்டு முதல் புகைப்பட துறையில் இருந்து வரும் இவர், 10 ஆண்டுகளாக புலிகளும், மனிதனுக்குமான வாழ்வியல் குறித்த புகைப்படங்களை ஆவணப்படுத்தி வருகிறார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருது இவருடைய, 20வது விருதாகும்.உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான World Press Photo Awards விருது பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.