Asianet News TamilAsianet News Tamil

இந்திய குடும்பத்தில் மிக அழகான மாநிலம் தமிழ்நாடு... வெங்கையா நாயுடு பெருமிதம்..!

தமிழும், தமிழ்நாடும் மனதுக்கு நெருக்கமானவை என எப்போதும் சொல்வேன். நாட்டில் மிக அழகான மாநிலம் தமிழ்நாடு என உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.

world investorssummit 2019... Venkaiah Naidu speech
Author
Chennai, First Published Jan 24, 2019, 5:12 PM IST

தமிழும், தமிழ்நாடும் மனதுக்கு நெருக்கமானவை என எப்போதும் சொல்வேன். நாட்டில் மிக அழகான மாநிலம் தமிழ்நாடு என உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார். 

தமிழகத்தில் திறமையாக, கடினமாக உழைக்கும் தொழிலாளர்கள் ஏராளமாக உள்ளனர். மத்திய-மாநில அரசுகள் இடையே போதிய ஒத்துழைப்பு இருப்பது முக்கியமானது. தமிழகத்தில் முதலீட்டை விதைக்கும் முதலீட்டாளர்கள் சிறந்த அறுவடையை பெறுவர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்கு முன் இந்தியாவின் ஜிடிபி மிகவும் அதிகமாக இருந்தது. world investorssummit 2019... Venkaiah Naidu speech

ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்பதை இந்தியாவின் தத்துவம் என்றார். இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் இளைஞர்கள் என்பது கவனிக்கத்தக்கது. நாகப்பட்டினத்தில் பெரிய முதலீடு செய்ய ஒரு நிறுவனம் முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. போக்குவரத்து, தொலைத்தொடர்வு உள்ளிட்ட அனைத்து துறைகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. 

தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தி வரவேற்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. தொழில் முனைவோருக்கான சூழல் நிலவும் 2-வது மிகப்பெரிய நாடு இந்தியா என்றார். வளர்ச்சியில் சீனாவை இந்தியா முந்தும் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். விவசாயத் துறையில் நிலவும் சில பிரச்சனைகள் உண்மை தான். அவற்றுக்கு தீர்வு காணப்படும் என துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு உறுதிப்பட தெரிவித்துள்ளார். world investorssummit 2019... Venkaiah Naidu speech

மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்புபவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. கருப்பு பணத்தை மீட்க வெளிநாடுகளுடன் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன என உரையை நிறைவு செய்யும் போது தமிழில் நன்றி என கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios