Worker who killed the tunnel was killed Accident? Suicide? Investigation continues ...

வேலூர்

காட்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது சரக்கு ரயில் மோதியதில் தொழிலாளி இறந்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி ஈ.பி.காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (45). தொழிலாளியான இவருக்கு வீணா என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், ரமேஷ் நேற்று காட்பாடி - லத்தேரி இரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்துக் கொண்டிருந்த சரக்கு இரயில் மோதியது. இதில், ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை இரயில்வே காவலாளார்கள் நிகழ்விடத்திற்கு சென்று ரமேஷின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது விபத்தா? அல்லது தற்கொலையா? என்று வழக்குப் பதிந்து காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.