மதுரையில் கழிவுநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் கழிவுநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட விளாங்குடியில் பாதாளச் சாக்கடை அமைப்பதற்கு பள்ளம் தோண்டும் பணியானது நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் கழிவுநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணியில் ஈடுப்பட்டிருந்த போது, வட மாநில தொழிலாளி ஒருவர் மண் குவியலுக்குள் சிக்கிக் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள்..தலைமையாசிரியர் மீது நடவடிக்கை..பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
இதனிடையே சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றூம் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவரை பொக்லைன் இயந்திரம் கொண்டுவரப்பட்டு மீட்கும் முயற்சியில், மண் சரிவில் சிக்கியிருந்த தொழிலாளி தலை துண்டித்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மண்சரிவில் சிக்கி இறந்தவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வீரன் என்ற சதீஷ் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் இல்லை.. பெருமையின் அடையாளம்.. அமைச்சர் அன்பில் அதிரடி..
